»   »  ஸ்ரீவித்யாவுக்கு என்ன ஆச்சு?

ஸ்ரீவித்யாவுக்கு என்ன ஆச்சு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவித்யாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. சமீப காலமாக சினிமாக்காரர்கள் உள்படயாரையும் சந்திக்க மறுத்து வருகிறாராம்.

கணவரிடம் இருந்து பிரிந்த பின்னரும் கலகலவென தான் இருந்தார். தொடர்ந்து தமிழ்,மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் நடித்தார். மலையாள டிவி சீரியல்களிலும் பிஸியாகஇருந்தார்.

சில காலத்துக்கு முன் திடீரென தன்னைச் சுற்றி இரும்புத் திரையைப் போட்டுக் கொண்டார். அவர்எங்கிருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. பின்னர் திடீரென தனது கூட்டை விட்டு வெளியேவந்தவர், தீவிர சாய்பாபா பக்தையாக மாறிப் போயிருந்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் சுய சிறையில் அடைந்துகொண்டிருக்கிறார்.

பிரபுவும் கார்த்திக்கும் நடிக்கும் குஸ்தி படத்தில் அவரை நடிக்க வைக்க நினைத்து அனுகினாராம்தயாரிப்பாளர். ஆனால், நடிக்கப் பிடிக்கவில்லை என்று கூறி அனுப்பிவிட்டாராம்.

அவரைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் ஸ்ரீவித்யாவைத் தொடர்புகொள்ள முயன்றபோது முடியாமல் போய்விட்டதாம்.

ஒரு வழியாய் கஷ்டப்பட்டு அவரைத் தொடர்பு கொண்ட புரொடக்ஷன் மானேஜர் பார்ட்டியிடம்,நான் சினிமாவில் நடிக்கிற மூடில் இல்லை என்று கூறிவிட்டாராம்.

பெரும்பாலான நேரம் புட்டபர்த்தியிலும் பெங்களூர் அருகே உள்ள ஒயிட் பீல்டிலும் உளளசாய்பாபாவின் ஆஸ்ரமத்திலேயே இருக்கிறாராம்.

போன் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, சென்னை வீடும் பூட்டியே கிடக்கிறதுஎன்கிறார்கள். இது போதாதா.. கோடம்பாக்கத்தில் அவலைப் போட்டு என்னென்னவோ சொல்லிமென்று கொண்டிருக்கிறார்கள்.

மன உளைச்சல் அது, இது என பலவித கதைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந் நிலையில் குஸ்தி படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு தரப்பட இருந்த அம்மா கேரக்டர் இன்னொரு மூத்தநடிகைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர் யாரா தெரியுமா? சாட்சாத் லட்சுமியே தான்.

என்ன ஆச்சு ஸ்ரீவித்யாவுக்கு?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil