»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

எவர் கிரீன் ஸ்ரீவித்யா மீண்டும் கல்யாணம் செய்து கொண்டுள்ளாராம்.

ஆனால் இது ரகசிய கல்யாணம், அது மட்டுமல்லாமல் தன்னை விட 20 வயது குறைந்த இளைஞரை அவர் கல்யாணம் செய்துள்ளதாகக்கூறுகிறார்கள்.

பிறப்பால் மலையாளியான ஸ்ரீவித்யா பிரபல கர்நாடக இசைக் கலைஞரான மறைந்த எம்.எல். வசந்தகுமாயின் மகள். அபூர்வ ராகங்களில்காயத்ரி என்ற வேடத்தில் அறிமுகமானார். உடனே ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து பிரபலமானார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்துள்ள ஸ்ரீவித்யா, கமல்ஹாசனை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் கமல் ஒதுங்கிக் கொண்டதால் அந்தத் திருமணம் நடக்கவில்லை.

பின்னர் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீவித்யா, அவரால் இன்பத்தை விட துன்பத்தையே அதிகம்சந்தித்தார். கொடூரக் கணவடரிம் சிக்கி சித்திரவதை அனுபவித்த ஸ்ரீவித்யா சொத்துக்களையும் அவரிடம் இழந்துவிட்டு, தனி மரமாய்நின்றார்.

ஒரு வீட்டை மட்டும் கோர்ட்டில் வழக்குப் போட்டு கடுமையாகப் போராடி மீட்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட ஸ்ரீவித்யா, சாய்பாபாவின் தீவிர பக்தை ஆனார். அடிக்கடி புட்டபர்த்திக்கும் போக ஆரம்பித்தார்.

இந் நிலையில்தான் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குனர்ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சில உதவி இயக்குனர்களையும் ஸ்ரீவித்யாவையும் இணைத்து செய்திகள் வந்ததுண்டு. ஆனால், அவை வெறும் சினிமாகிசுகிசுக்களாக கரைந்து போயின.

இப்போது இந்த உதவி இயக்குனர் விஷயத்தில், அது கல்யாணம் வரை போய் முடிந்துள்ளதாக சொல்கிறார்கள்.

ரகசியமாய் இருவரும் மணம் முடித்துக் கொண்டு இப்போது கேரளாவில் குடித்தனம் செய்து வருகிறார்களாம்.

சென்னையில் உள்ள ஸ்ரீயின் வீட்டில் சில நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்.தனது கணவன் கோரிக்கைக்கு ஏற்ப கேரளாவுக்கு குடி பெயர்ந்துள்ளாராம் ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யாவை விட 20 வயது குறைந்தவராம் புதுக் கணவர் என்கிறார்கள்.

மீண்டும் ஒரு அபூர்வ ராகம்!

Read more about: actress, asst director, cinema, ramya, srividhya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil