உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
சென்னை: தான் பார்த்து வளர்ந்த பையன் தன்னையே மிஞ்ச துடிப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் தனக்கு உண்டான மரியாதையை ஏன் தரவில்லை என்கிற கோபத்தில் உச்ச நடிகர் உள்ளாராம்.
பெரிதாக பெயருக்கோ, பட்டத்துக்கோ ஆசைப்படாமல் எளிய மனிதராக இயல்பாக இருந்து வரும் உச்ச நட்சத்திரம் காது வரை இந்த விஷயத்தை கொண்டு சென்ற நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.
இந்த விவகாரத்தை சம்பவ இடத்திலேயே மாஸ் நடிகர் பேசி தடுத்து இருக்கலாமே ஏன் அப்படி செய்யவில்லை என்கிற கேள்வியும் நடிகர் மீது ரொம்பவே அதிருப்தியிலும் உச்ச நட்சத்திரம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கேட்டாலே கொடுத்துடுவேன்
அந்த பட்டம் தான் வேண்டும் என்றால் என்கிட்ட கேட்டாலே கொடுத்துடுவேன். எனக்கு மக்கள் கொடுத்த பட்டத்தை வைத்து ஏகப்பட்ட நடிகர்கள் லிட்டில் என்றும் யங் என்றும் போட்டு பரவசம் அடையும் போது கூட நான் பெரிதாக அதை கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தை எல்லாம் எதுக்கு ஏன் காது வரைக்கும் கொண்டு வந்தீங்க என உதவியாளர்களையே திட்டி விட்டாராம் அந்த உச்ச நட்சத்திரம்.

சந்தோஷம் தான்
என்னை யாரும் முந்தக் கூடாது என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இங்கே ஏற்ற இறக்கங்கள் எப்போதும், எல்லாருக்கும் ஏற்படுவது சகஜம் தான். என்னை மிஞ்சி விட்டார் அந்த நடிகர் என்றால் முதலில் சந்தோஷப்படும் ஆளே நானாகத்தான் இருப்பேன். ஆனால், தேவையில்லாமல் இதை ஏன் ஒரு பிரச்சனையா கிளப்பணும் என பேசி உள்ளாராம்.

பெருசா போக விட்ருக்கக் கூடாது
நாம என்ன தான் உயர்ந்தாலும், நமக்கு முன்னோடிகளை என்னைக்குமே மறந்து விடக் கூடாது. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுத்தால் தான். நமக்கு பின்னாடி வரவங்க நமக்கு அந்த மரியாதையை கொடுப்பாங்க..இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அந்த நடிகர் கிள்ளி எறிஞ்சிருக்கலாம். பெருசா போக விட்ருக்கக் கூடாது என்றாராம்.

தாங்க மாட்டாங்க
சின்ன பசங்களுக்கு நான் யாருன்னு காட்டுனா தாங்க மாட்டாங்க, இந்த வருஷம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு கொடுத்துடலாம். நீங்க இந்த பிரச்சனையை பெருசாக்காம அப்படியே விட்ருங்க எந்த பாக்ஸ் ஆபிஸ் வச்சு அவரு பெரிய ஆளுன்னு சொல்றாரோ அதே பாக்ஸ் ஆபிஸ் வச்சு நம்ம வெயிட்டை காட்டிடலாம் என உச்ச நட்சத்திரம் ஒரே போடாக போட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











