»   »  சுச்சிலீக்ஸ் எதிரொலி... பார்ட்டி என்றாலே அலறும் பிரபலங்கள்

சுச்சிலீக்ஸ் எதிரொலி... பார்ட்டி என்றாலே அலறும் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீக் எண்டுக்காக ஆரம்பித்த பார்ட்டி கலாசாரம் தமிழ் சினிமாவை ஆக்ரமித்து தினமும் ஒரு பார்ட்டியாக உருவெடுத்தது. இதனால் சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செமையாக கல்லா கட்டின. ஆனால் இந்த பார்ட்டிகளுக்கெல்லாம் வேட்டு வைத்து விட்டது சுச்சிலீக்ஸ் விவகாரம்.

பார்ட்டிகளில் மிதமிஞ்சிய உற்சாகத்தில் எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் சுச்சிலீக்ஸில் வலம் வர சம்பந்தப்பட்ட பிரபலங்கள் நாறத் தொடங்கினார்கள்.

Suchi Leaks effect.. No parties in Kollywood

வந்தது கையளவு. இருப்பது கடலளவு என்கிறார்கள். எனவே பயந்துபோன பிரபலங்கள் இப்போது பார்ட்டிகளில் மொபைல்களுக்கு ஸ்ட்ரிக்டாக தடை போட்டு விட்டார்கள். பலர் பார்ர்ட்டி என்றாலே அலறுகிறார்களாம்.

இனி பார்ட்டி என்றால் தமிழ்நாட்டைத் தாண்டி வைத்துக் கொள்வோம். படம், வீடியோ எடுக்க தடை. நம்பிக்கையானவர்கள் மட்டுமே அனுமதி என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகைகள் வாய்ப்புக்காக வைக்கும் பார்ட்டிகள் கூட குறைந்துவிட்டன. கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்!

English summary
Kollywood celebrities now avoiding parties after the worst effect of suchileaks controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil