»   »  சுள்ளான் படும் பாடு

சுள்ளான் படும் பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடித்துள்ள சுள்ளான் படத்தை வினியோகஸ்தர்கள் மூலமாக இல்லாமல் நேரடியாக வாங்கி திரையிடப்போவதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மற்ற படங்களில் நடிக்க காசு வாங்கிவிட்டு, நடிக்காமல் தனது அப்பாவின் படத்தில் நடிக்கப் போய்விட்டதால்,தனுசின் சுள்ளான் படத்தை திரையிட வினியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து இந்த 3 மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களும் சென்னையில் அவசரமாகக் கூடி விவாதித்தனர்.அதில், சுள்ளான் படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து நேரடியாக வாங்கி திரையிடுவது என்று முடிவுசெய்துள்ளனர்.

இதையடுத்து இந்த 3 மாவட்டங்களில் உள்ள 12 திரையரங்குகளிலும் எந்தப் படத்தையும் திரையிடக் கூடாதுஎன்று புதிதாக ஒரு தடையை வினியோகஸ்தர்கள் சங்கம் விதித்துள்ளது.

தனுஷ் இதுவரை நடித்த, ஒப்பந்தமான படங்களிலேயே சுள்ளான் தான் மிகப் பெரிய பட்ஜெட் படமாகும்.தயாரிப்புச் செலவு மட்டும் ரூ 8 கோடியைத் தாண்டியுள்ளதாம். சூட்டிங் முடிந்து படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல்இருப்பதால், தயாரிப்பாளர் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதா இல்லையா என்பது பற்றிக் கூட கவலைப்பட நேரமில்லாமல் தனுஷ் தனதுதந்தை கஸ்தூரிராஜா இயக்கும் ட்ரீம்ஸ் பட சூட்டிங்குக்குப் போய்விட்டார்.

தொடரும் பிரச்சினைகள் குறித்து தனுஷ் கூறுகையில்,

புதுக்கோட்டையிலிருந்து.. படம் சரியாகப் போகாததால் என் இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள சுள்ளான்படத்தை முதலில் முடிப்பது எனத் தீர்மானித்தேன். ஏனென்றால் இது அப்படிப்பட்ட சப்ஜெக்ட். நிச்சயம் ஓடும்.இப்போது சுள்ளான் முடிந்து, ட்ரீம்ஸ் படத்தில் பிஸியாகி விட்டேன். இன்னும் 20 நாட்களில் எனதுபோர்ஷன்கள் முடிந்து விடும்.

அதன்பிறகு தேவதையைக் கண்டேன் படத்துக்கு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பேலன்ஸ் உள்ளது. அதைமுடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த மாதம் முதல் பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக் காலம் படத்தில் நடிக்கத்தொடங்கி விடுவேன்.

ஆகஸ்ட், செப்டம்பரில் எனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு நாள் ஒரு கனவு படத்தில்நடிக்கிறேன்.

என்னை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்க கடுமையாக உழைத்துவருகிறேன். அடுத்த வருடம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிதானமாக செயல்படத் தொடங்குவேன் என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil