»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

சூர்யாவையும் ஜோதிகாவையும் போல இதுவரை தமிழ் சினிமா உலகில் யாருமே காதலித்து இருக்க முடியாது.அந்த அளவுக்கு இரண்டு பேரும் படு ரகசியமாக தங்களது காதலை வளர்த்து வருகின்றனர்.

இருவரும் காதலிக்கின்றனர் என்ற விஷயம் மட்டுமே சினிமாக்காரர்களுக்குத் தெரியும். ஆனால் எங்குசந்திக்கிறார்கள், எங்கு போகிறார்கள் என்ற ஒரு செய்தியும் இதுவரை யாருக்குமே உறுதியாகத் தெரியவில்லை.மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து கொண்டு செல்போனில் கொஞ்சிக் கொள்வது போன்ற செயல்களும்இருவரிடமும் கிடையாது.

மிகவும் கட்டுப்பாட்டுடனும், ரகசியமாகவும் தங்களது சந்திப்பை வைத்துக் கொள்கின்றனராம் இருவரும்.

சில வாரங்களுக்கு முன்பு வரை இருவரும் தி.நகரில் உள்ள ஒரு காபி பாரில் சந்திப்பதை வழக்கமாககொண்டிருந்தார்களாம். இவர்களுக்காக அந்த காபி பாரில் ஒரு தனி பகுதியையே ஒதுக்கிக்கொடுத்திருந்தார்களாம் பார் நிர்வாகிகள்.

யாருடைய தொந்தரவும் இல்லாமல் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்புவார்களாம். அங்கும் பலரதுகண்களில் பட ஆரம்பித்துவிட்டதாகக் கருதிய இருவரும் இப்போது காபி பாருக்கும் வருவதில்லை.

இப்போது அவர்கள் சந்திக்கும் இடம் படு பிரபலமானது.

சாட்சாத் குஷ்புவின் வீடு தான் அது. இருவரும் இப்போது அங்கு தான் மீட் செய்து கொள்கிறார்களாம். இவர்களதுகாதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே பச்சைக் கொடி காட்டி, ஆதரவும் தந்து வருவது குஷ்பு தான். மேலும் நக்மாவுடன்சண்டை போட்டுக் கொண்டு அவரது வீட்டை விட்டு வெளியேறிய ஜோதிகா குடியேறியதும் குஷ்புவுக்குசொந்தமான பிளாட்டில் தான்.

தனது காதல் குறித்து குஷ்புவிடம் விலாவாரியாக ஜோதிகா பேசியதைத் தொடர்ந்து சூர்யாவும் ஜோதிகாவும் இனிதன் வீட்டிலேயே சந்தித்துக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டாராம்.

சினிமாவுக்கு வந்த தம்பி:

இன்னொரு விஷயம் தெரியுமா, சூர்யாவைத் தொடர்ந்து சிவக்குமாரின் வீட்டில் இருந்து இன்னொருவரும்சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் சூர்யாவின் தம்பி கார்த்திக்.

அமெரிக்காவில் எம்.எஸ். முடித்துவிட்டு சாப்ட்வேர் சைடில் போவார் என்று எதிர்பார்த்தார் தந்தை. ஆனால்,சென்னை திரும்பிய அவர் சினிமாவில் நுழைய சிவக்குமாரிடம் அனுமதி வாங்கிவிட்டாராம். நடிக்கும் ஆர்வத்தில்அல்ல, அவரது ஆசையெல்லாம் இயக்குனராவது தானாம்.

இப்போது கார்த்திக் இருப்பது மணிரத்தத்திடம். அவரது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil