»   »  விரட்டும் சொர்ணமால்யா!!

விரட்டும் சொர்ணமால்யா!!

Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புக்காக நடிகர்களையும், இயக்குநர்களையும் விரட்டி விரட்டி சான்ஸ் கேட்கிறாராம் சொர்ணமால்யா.

தொய்ந்து போய்க் கிடந்த சொர்ணமால்யாவின் மார்க்கெட் மொழிக்குப் பிறகு நிமிர்ந்து நிற்க ஆரம்பித்துள்ளது. அடடே நல்லா நடிச்சிருக்கீங்களே என்று பலரும் பாராட்டவே, உச்சி குளிர்ந்து போன சொர்ணமால்யா, டொங்கடித்துப் போன தனது உடம்பை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு, புத்தெழுச்சியுடன் புதுப் பட வாய்ப்புக்காக தீவிர வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார்.

தினசரி அவரது முதல் வேலையே போனை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு தனக்குத் தெரிந்த ஹீரோக்களுக்கும், இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுப்பதுதான்.

முன்னாடி மாதிரி இல்லை, நன்கு ஸ்லிம் ஆகியுள்ளேன். டான்ஸிலும் பட்டையைக் கிளப்புகிறேன், கிளாமருக்கும் நோ ப்ராப்ளம், சான்ஸ் தாங்களேன் என்று நைநைசாகப் பேசி வாய்ப்பு கேட்கிறாராம்.

அத்தோடு விடாமல் கிடைக்கும் பட விழாக்கள் அத்தனைக்கும் போய் விடுகிறார். சினிமா விழாக்களையும் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் கூட விஜய்யின் போக்கிரி பட விழாவை தொகுத்து அளித்தார்.

அந்த விழாவிலும் சிலரிடம் வலியக்கப் போய் பேசி என்னைப் பார் என் அழகைப் பார் என்ற ரேஞ்சுக்கு மறைமுகமாக வாய்ப்பு கேட்டாராம்.

பிரகாஷ் ராஜே தனது அடுத்த படத்தில் அட்டகாசமான ரோல் தருகிறேன் என்று சொர்ணாவுக்கு உறுதியளித்துள்ளாராம்.

மொத்தத்தில் விட்டதைப் புடிடா விட்டலாச்சார்யா கணக்காக படு தீவிரமாக சான்ஸ் வேட்டையில் மும்முரமாகியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil