பல படங்கள் நடித்தும் இன்னமும் சில லட்சத்துக்கே கூப்டுறாங்க.. புலம்பும் பிரியமான நடிகை!
சென்னை: பிரியமான நடிகை சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் அவருக்கான சம்பளம் உயரவே இல்லை என ரொம்பவே புலம்பி வருகிறாராம்.
சினிமாவில் வாய்ப்பு கிடைத்த உடனே கிடுகிடுவென சில நடிகைகளின் வளர்ச்சி உச்சத்துக்கு சென்று கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள்.
ஆனால், பல நடிகைகள் சில பல லட்சங்களுக்கே காலம் முழுவதும் நடித்து வரும் நிலைமை நீடித்து விடும்.

நல்ல நடிகை
பார்ப்பதற்கு அப்படியே பக்கத்து வீட்டுப் பெண் போல நல்லா இயல்பாக நடிக்கக் கூடியவர் தான் அந்த பிரியமான நடிகை. சும்மா டூயட் பாட மட்டும் சினிமாவுக்கு வராமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீண்ட காலமாகவே அவருக்கு இருந்த மனக்குமுறலை நண்பர் ஒருவரிடத்தில் கொட்டித் தீர்த்து இருக்கிறாராம்.

நிறைய படங்கள்
நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த பிரியமான நடிகை. பட வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை என்றாலும், அவருக்கு திடீரென மனதளவில் அப்படியொரு குறை வந்து விட்டதாம். அனைத்து நடிகைகளுக்கு வரும் சம்பள பிரச்சனை தான் அது என்கின்றனர்.

சில லட்சங்களுக்கு கூப்டுறாங்க
பல படங்கள் நடித்து விட்ட நிலையிலும், இன்னமும் சில லட்சங்களுக்கு மட்டுமே தன்னை புக் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர் என்றும் கொஞ்சம் சம்பளத்தை ஏற்றலாம் என நினைத்து வாய் விட்டாலும், உடனடியாக வேறு ஆளை பார்க்க வேண்டிய நிலை வரும் என ஸ்ட்ரெயிட்டாகவே மிரட்டுவதால் வேறு வழியில்லாமல் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு நடித்து வருகிறேன் என புலம்பி தள்ளியிருக்கிறாராம்.

டாப் பொசிஷன்
நன்றாக நடித்தால் நமக்கும் முதல் வரிசையில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தால், டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கே தன்னை பலரும் டீல் செய்து வருவதாக வேதனைப் பட்டுள்ளார்.

இந்த நிலை மாறும்
பொறுமையாக தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக செய்து வருவதால் தான் உங்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. திடீரென அதிகம் ஆசைப்பட்டால், உள்ளதுக்கே மோசம் என்கிற நிலை உருவாகி விடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இந்த நிலை மாறி நீங்களும் கோடிகளில் சம்பளத்தை வாங்குவீர்கள் என அந்த பிரபலம் அட்வைஸ் கொடுத்துள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











