நடிகர் கொடுத்த அசைன்மென்ட்.. மறுத்த நடிகை.. அடுத்து நடந்த கேவலமான விஷயம்!
சென்னை: இந்த நடிகை தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் நன்கு அறிமுகம் பெற்ற நடிகையாக உள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஹோம்லி கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகை என்ற பெயரையும் வாங்கியுள்ளார். நடிகையைப் பொறுத்தவரைக்கும் கிளாமர் என்றாலே தெறித்து ஓடும் நடிகையாக உள்ளார். இப்படியான நடிகைக்கு கிடைத்த கூடாத சகவாசத்தால் நடிகை இப்போது பெரிய தலைவலியை எதிர்கொண்டுள்ளார்.
அதாவது நடிகைக்கு சினிமா வட்டாரத்தில் தனக்கென சில நெருக்கமான வட்டத்தை உருவாக்கினாரா, அல்லது ஏற்கனவே நெருக்கமாக இருந்து கொண்டு இருந்த வட்டத்திற்குள் சென்று தன்னை இணைத்துக் கொண்டாரா என்ற சந்தேகத்தில் இருப்போது இருக்கிறாராம். அதாவது நடிகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். இவர் இதுவரை விரல் விட்டு எண்ணும் அளவுக்கான படங்களில்தான் நடித்துள்ளார். அதற்கு காரணம் நடிகை கொஞ்சம் கூட கிளிவேஜாக கூட நடிக்க மாட்டேன் என்று எடுத்த முடிவுகள்தான்.

அரசியல் நடிகர்: இப்படி இருக்கும்போது நடிகைக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்து ஒரு ஆஃபர் வந்துள்ளது. அதாவது சினிமாவில் இருந்து அரசியலுக்கு போயுள்ள நடிகர், தனக்கு நெருக்கமான வட்டாரத்தை வைத்து தனக்கு ஆதரவாகவும் ஏற்கனவே ஆட்சியுள்ள கட்சியின் நிர்வாக குறைபாடுகளை சுட்டிக் காட்டும் விதமாகவும் அவ்வப்போது பதிவும் சில வீடியோக்களையும் அப்லோட் செய்யச் சொல்லி அசைன்மென்ட் கொடுத்துள்ளார். நடிகையும் நாம் மட்டுமா செய்யப்போகிறோம் கூட மற்றவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டு கூட்டத்தில் கோவிந்தா போட முடிவெடுத்துள்ளார்.
கேவலமான வேலை: ஒரு கட்டத்தில் நடிகைக்கு இது தேவையில்லாத வேலை என்று தோனவே, நடிகை அந்த குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் கடுப்பான நடிகரோ, தனது இணைய வட்டாரத்தை வைத்து நடிகைக்கு நடிக்கத் தெரியாது, ஆடத் தெரியாது, சிரிக்கத் தெரியாது என்று அவதூறுகளை பரப்பச் சொல்லி உள்ளார். இதைப் பார்த்து கொஞ்சமும் நடுங்காத நடிகை, பெரிய நடிகர்னு நினைச்சா இவ்வளவு கேவலமா நடந்து கொள்கிறாரே என்று நினைத்துக் கொண்டு, அடுத்தகட்ட வேலையைப் பார்க்கப் போய்விட்டார்களாம். இப்படி இருக்கும்போது, நடிகரின் இந்த விஷயத்தை நடிகை லேசாக வெளியே சொல்லியுள்ளாராம். இதனால் ஆளுங்கட்சி கொஞ்சம் உஷாராகி கொண்டுள்ளது. மேலும் நல்லா இருந்த நடிகரை அதிகார ஆசை இப்படி மாத்திடுச்சே என்று புலம்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











