சுகத்தை தேடிப்போய் வினையை வாங்கிக் கொண்ட நடிகர்.. இப்போ அதைவிட கேவலமான வேலையை செய்கிறாரா?

By Staff

சென்னை: இந்த நடிகர் நடித்தது என்னமோ வெகு சில படங்கள்தான் ஆனால் இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவராக மாறிப்போய்விட்டார். பலரும் தொலைக்காட்சியில் இருந்து அதாவது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து புகழ் தேடிக் கொள்வார்கள். ஆனால் இந்த நடிகரோ வெள்ளித்திரையில் இருந்து அப்படியே சின்னத்திரைக்கு ரூட்டை மாற்றிக் கொண்டவர்.

இந்த நடிகருக்கு நடிப்பைவை விட அவருடைய மற்றொரு தொழிலில் நல்ல வருமானமும் புகழும் அவருக்கு கிடைப்பதால் நடிகர் நடிப்பைக் காட்டிலும் அந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் சினிமா வட்டாரத்திலும் தனது தொழிலை அவர் வளர்த்துக் கொண்டு வந்துள்ளாராம். அப்படி இருக்கும் போது அங்கு அவருக்கு பிரபலம் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறிவிடுகிறது. இந்த நடிகரோ ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. இப்படி இருக்கையில் வடிவேலு டயலாக்கை மனதில் வைத்து அந்த பெண் பிரபலத்திடம் பழகினாரோ என்னவோ தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்துள்ளது என்று கூறுகிறார்கள்.

Tamil Cinema Gossip about Actor Who Did Some Cheap Things Against His Second Wife

ரகசிய திருமணம்: இதனால் அந்த பெண் பிரபலம் வாயும் வயிறுமாக இருக்கிறார். இப்படி இருக்கையில் பெண் பிரபலத்திடம் குழந்தை எல்லாம் வேண்டாம், உன்னோட வசதிக்கு நானும் என்னோட அசதிக்கு நீயும் என இருந்து கொள்வது இருவருக்கும் நல்லது என்று சொல்லி, கருவைக் கலைக்கச் சொல்லி இருக்கிறார். பெண் பிரபலமோ நடிகர் கழட்டிவிட பார்க்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு, கருவை கலைக்க மாட்டேன் எனக் கூறி வளர்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இருவரும் ரகசியமாக திருமணம் எல்லாம் செய்து கொண்டுள்ளார்களாம்.

கேவலமான வேலை: பெண் பிரபலம் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்தது மட்டும் இல்லாமல், நான் வாயும் வயிறுமாக இருக்கிறேன் என்று ஊர் உலகத்துக்கே சொல்லிவிட்டார். அதன் பின்னர் நடிகரும் பெண் பிரபலத்தை கண்டு கொள்வது இல்லை. போன் செய்தால் எடுப்பதில்லை என ஏகப்பட்ட சம்பவங்களை நடிகர் செய்துள்ளாராம். இதற்கிடையில் தனது நெருக்கமான வட்டங்களிடம் அந்த பெண் பிரபலத்திற்கு எதிராக பல விஷயங்களைப் பேசச் சொல்லி கேட்டு வருகிறாராம். ஒரு கட்டத்தில் இந்த நடிகர் பணம் எல்லாம் கொடுக்கிறேன், பேசுங்க, இதுதான் கன்டென்ட் என்ற லெவலுக்கு இறங்கி உள்ளாராம். இதைக் கேள்விப்பட்டவர்கள், நடிகருக்கு எதற்கு இந்த வேலை எல்லாம், சுகத்தை தேடிப்போய் வினையை வாங்கிக் கொண்டது மட்டும் இல்லாமல் தற்போது ரொம்பவும் கேவலமான வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கி விட்டாரே என்று பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X