பெரிய இடத்துக்கு ஆசைப்பட்டு நடிகர் படும் பாடு.. பாதியிலும் எஸ்கேப் ஆக முடியாமல் தவிப்பு!
சென்னை: தமிழ் திரையுலகில் உச்சத்தில் உள்ள பெரிய நடிகர்களைப் போல ஆக வேண்டும் என்றால், அவர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ அதேபோல மற்ற நடிகர்கள் முயற்சி செய்வார்கள். இது பெரிய இடத்திற்கு செல்வதற்கு மட்டுமல்லாமல், ஒரு ஹிட் படம் கொடுக்கவும் இதே முயற்சி இருக்கும். அதாவது ஒரு படம் ஒரு டெம்ப்ளேட்டில் வெற்றி பெறுகிறது என்றால், அதே டெம்ப்ளேட்டில் மற்ற நடிகர்களும் படம் நடிக்க முயற்சி செய்வது போல இந்த நடிகர் ஒரு பெரிய நடிகர் அடைந்த உயரத்தை அடைய எடுத்த முயற்சி அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மாறாக அவருக்கு அது பின் விளைவுகள் தொடங்கி பக்க விளைவுகள் வரை பலவற்றாலும் அவதிப்பட்டு வருகிறாராம்.
அதாவது பிரபல தொலைக்காட்சி ஒன்று உலக அளவில் பெரிய ஹிட் அடித்த நிகழ்ச்சி ஒன்றை தமிழிலும் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் கவனம் ஈர்த்து வெற்றி பெற்ற நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பெரிய நடிகரை அணுகி அவருக்கு அதற்கு ஏற்ற வகையில் பெரிய சம்பளத்தையும் பேசி புக் செய்தது.

நடிகருக்கு அடித்த ஜாக்பாட்: அந்த பெரிய நடிகரும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டார். அதற்கு அவரது இன்னொரு திட்டமும் காரணமாக இருந்தது. எப்படியும் அவரது இன்னொரு திட்டத்திற்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணி களத்தில் இறங்கினார். அதுவும் அவருக்கு ஓரளவுக்கு கை கொடுத்தது. அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் இருந்து அந்த நடிகர் விலகிக் கொள்ள, அந்த நடிகருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நியமித்தது டிவி நிர்வாகம். புதிதாக நியமிக்கப்பட்ட நடிகரோ, தமிழ் சினிமாவிலேயே அந்த பெரிய நடிகருக்கு அடுத்து நாம் தான் பெரிய ஆளு போல, அதான் இவங்க நம்மகிட்ட வந்திருக்காங்க என நினைத்தாரோ என்னவோ, அந்த நடிகரின் நடவடிக்கைகள் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் ரொம்பவும் ஓவரா இருந்துள்ளது.
புலம்பல்: இதில் என்னவென்றால் நடிகரின் செயல்பாடுகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம். இது மட்டும் இல்லாமல் ரசிகர்களும் நடிகரைப் போட்டு தாளித்து வருவதால் நடிகருக்கு என்ன செய்வது என்றே புரியாமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளாராம். விட்டால் உங்க சம்பளமும் வேண்டாம், சௌகரியமும் வேண்டாம் என ஓடிவிடும் அளவுக்கு நடிகரின் மனநிலை இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











