தேவையில்லாத வேலையைச் செய்து பெரிய கடனில் சிக்கிய நடிகர்.. நண்பரிடம் கேட்ட உதவி.. உடனே வந்த அட்வைஸ்!

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் கரை கண்ட நடிகர் என்றே சொல்லலாம். ஆனால் இவரைப் பொறுத்தவரையில் ஒரு கதை மீது நம்பிக்கை வந்து விட்டால், அந்த கதையை படமாக்கி ரிலீஸ் செய்ய தனது சொத்தை விற்கவும் தயக்கம் காட்டமாட்டார். இப்படி இருக்கும்போது இந்த நடிகர் கடைசியாக தான் நடித்த படத்தை தானே தயாரித்தார். இந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதால் மிகப்பெரிய கடனுக்கு ஆளானார். இப்படி இருக்கையில் இந்த கடனைச் சமாளிக்க நடிகர் எடுத்த முடிவு மிகவும் முக்கியமானது.

அதாவது நடிகர் தயாரித்த கடைசி மூன்று படங்களில் இரண்டு படங்கள் அவருடைய நடிப்பில் உருவான படங்கள். அதேபோல், ஒரு படம் மட்டும் மற்றொரு நடிகர் நடித்து வெளியான படம். இதில் நடிகர் நடித்த படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த பணத்தைக் கொண்டு, அதாவது அந்த லாபத்தைக் கொண்டு மற்றொரு நடிகரின் படத்தை தயாரித்தார். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி இருக்கும்போது நடிகர் தான் எழுதிய கதையை தனக்கு நெருக்கமான இயக்குநரிடம் கொடுத்து திரைக்கதை எழுதச் சொன்னார்.

tamil cinema Gossip Actor Who Faced Very Big Lose And He ask to help to Another actor

இயக்குநரால் வந்த பிரச்னை: அந்த இயக்குநரோ, ஏற்கனவே இருந்த கதைக்கு திரைக்கதை அமைக்காமல், கூடுதலாக கதையில் சில மாற்றங்களைச் செய்து, அதற்கு திரைக்கதை அமைத்தார். படத்தில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் நடித்தார்கள். படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, பெரிய லாபத்தை தனக்கு கொடுக்கும் என்று நடிகர் நம்பிக் கொண்டு இருந்தார். இதற்காக தன்னிடம் இருந்த பணத்தை மட்டும் இல்லாமல், சில நூறு கோடிகள் கடனாக எல்லாம் வாங்கி உள்ளார். இப்படி இருக்கும்போது படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. இதனால் நடிகருக்கு தான் கடனாக வாங்கிய பணம் அனைத்தும் நஷ்டமாக மாறிவிட்டது.

அட்வைஸ்: இந்நிலையில் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, தனது நெருங்கிய நண்பரும் உச்ச நடிகருமானவரை நேரில் சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொல்லி, அவரது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வழங்கும்படி கேட்டுள்ளார். உடனே அந்த உச்ச நடிகரும் சரி என ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் நடிகர் தான் இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம். கால்ஷீட் கொடுத்ததும், நடிகரோ இனிமேல் தயாரிப்பு வேலைகளில் கால் வைக்க கூடாது என்று அறிவுரை கூறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X