தூண்டில் போட்ட நடிகரை வலையை வீசி கசக்கி எடுத்த நடிகை.. நடுரோட்டில் நிற்கும் நடிகரின் மனைவி!
சென்னை: இந்த நடிகர் நல்ல நடிகருப்பா, குடும்பம் பொண்டாட்டி புள்ளைனு மனுசன் தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்காருனு பலரது பாராட்டை பெற்ற நடிகர்களுல் இவரும் ஒருவர். இளம் வயதில் ஏற்பட்ட காதலை திருமணத்தில் முடித்த ராசிக்கார நடிகர் என்று எல்லாம் பெயர் வாங்கிய இவர், இப்போது ஒரு நடிகையிடம் இவர் சிக்கி உள்ளாரா, இல்லை இவரிடம் நடிகை சிக்கிக் கொண்டாரா என்ற குழப்பத்தை கோலிவுட் காதும் காதும் வைத்தபடி பேசிக் கொண்டு உள்ளது.
நடிகருக்கு என்று தனி மார்க்கெட்டே இருக்கிறது. தமிழில் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நடிக்கருக்கு என்று தனி மார்க்கெட்டே உள்ளது . இப்படி இருக்கும்போது நடிகர் ஒரு பார்ட்டியில் ஒரு நடிகரை சந்தித்த பின்னர்தான் நடிகரின் சொந்த வாழ்க்கையில் பல பிரசனைகள் வந்ததாம்.
அதாவது பார்ட்டியில் நடிகரும் நடிகையும் கொஞ்சம் போதையாக இருக்க, இருவரும் அப்போதுதான் பேசிக் கொள்கிறார்களாம். நடிகரும் நடிகையைப் பார்த்ததில் இருந்து நடிகை மீது ஒரு கண்ணாகவே இருந்துள்ளார். கடைசியில் நடிகைக்கு தூண்டில் போட முயற்சி செய்துள்ளார் நடிகர். நடிகர் தூண்டில் போட முடிவு செய்துவிட்டார் என்று தெரியாத நடிகையோ, நடிகரை தனது வீட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து விருந்து வைத்துள்ளார்.

ஏக போக விருந்து: நடிகை வைத்த ஏகபோக விருந்தில் நடிகருக்கு சகலமும் பரிமாறப்பட்டுள்ளதாம். நடிகையின் விருந்தை பார்த்து சொக்கிப் போன நடிகரோ, நடிகையே கதி என்று இருக்கிறாராம். சில நேரங்களில் நடிகையை தனது படப்பிடிப்பு தளத்திற்கு வரச்சொல்லி விடுகிறாராம். கேரவனுக்குள் இவர்கள் அடிக்கும் கூத்து குறித்து நடிகரின் மனைவிக்கு விஷயம் தெரியவர, நடிகருக்கு வீட்டில் இருந்து நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. ஆனால் நடிகரோ, நடிகையின் ஏகபோக விருந்துக்கு அடிமையாகி விட்டதால், அவரது மனைவி சொல்வதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லையாம்.
நடிகரின் மனைவிக்கு ஷாக்:நடிகரின் செயல் நாளாக நாளாக ரொம்பவும் மோசமாக போக, ஒரு படத்தின் முழு சம்பளமும் நடிகரின் அக்கவுண்ட்டில் இருந்து நடிகைக்கு மாற்றப்பட்ட வங்கி விவரங்களைப் பார்த்த மனைவி அதிர்ச்சி ஆகி தனது வாழ்க்கைக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறாராம். காதல் மனைவியை கண்டு கொள்ளாமல் ஏகபோக விருந்து வைக்கும் நடிகைக்கு நடிகர் சம்பளத்தை அளப்பதை கேள்வி பட்டவர்கள் நடிகையிடம் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











