எனக்குன்னே வருவாங்களாடானு புலம்பும் நடிகர்.. போட்ட பணம் எல்லாம் வீணா போச்சாம்!

By Staff

சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக உள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல் திரைத்துறையில் பல முகங்களை வெளிக்காட்டி அதில் வெற்றி பெறும் நட்சத்திரமாகவும் உள்ளார். இப்படி இருக்கும்போது, இந்த நடிகர் தனக்கு பெண் ரசிகர்கள் குறைந்து விட்டார்கள் எனவே, அவர்களை தனது படத்தை பார்க்க வர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்த வேலைக்கு பலன் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கிறாராம்.

அதாவது இந்த நடிகர் இந்திய சினிமாவிலேயே பலரும் வியந்து பார்க்கும் ஒரு பிரபலத்தின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். மிகவும் திறமையான நடிகர் என்றாலும் இந்திய அளவில் பிரபலமான ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு என தனி கவனம் குவியத் தொடங்கியது. இதனாலே தனது பெயரைக் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாகவே படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார்.

Tamil Cinema Gossip Actor Who Lament With His Close Circule To His Movie Box Office Collection

இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல், பாடல் எழுதுவது, பாடுவது, கதை திரைக்கதை அமைப்பது, இயக்குவது, தயாரிப்பது என ஒரு சகலகலா வல்லவன் தான். இப்படி இருக்கும் இந்த நடிகரும் அவரது மனைவியும் விவாகரத்து பெற போவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அந்த இந்திய அளவில் கொண்டாடப்படும் உச்ச நடிகரின் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. நமது அபிமான நடிகருக்கு இப்படி ஒரு கஷ்டத்தை கொடுக்கிறாரே இவர் என்று பேச்சுக்கள் எழுந்தது. இதனால் இந்த நடிகரின் படங்களுக்கு பெரிய அளவில் பெண் ரசிகர்கள் வராமல் இருந்தார்கள்.

நடிகர் போட்ட பிளான்: இப்படி இருக்கையில் ஒரு நல்ல கிராமத்துக் கதையை எடுத்தால், அதில் ஃபேமிலி செண்டிமெண்ட் வைத்தால் படத்தைப் பார்க்க பெண் ரசிகர்கள் வருவார்கள் எனத் திட்டமிட்டு ஒரு கதையை உருவாக்கி, அதை இயக்கி, நடிக்கவும் செய்தார். படத்தை அவர்தான் தயாரிக்கவும் செய்திருந்தார். இப்படி இருக்கும்போது இவரது படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்ட தேதியில் டாப் நடிகரின் படம் வெளியானதால் படத்தின் ரிலீஸை கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்.

புலம்பல்: அப்படி இருக்கும்போது, நடிகர் படத்தை ரிலீஸ் செய்து பெரிய அளவில் பெண் ரசிகர்களை கவரலாம் என்று திட்டமிட்டார். அதேபோல் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதையடுத்து வெளியான மற்றொரு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், இந்தப் படத்தின் மீது கவனம் குறைந்து விட்டது. இதனால் நடிகர் கொஞ்சம் அப்செட்டில் உள்ளாராம். ஆனாலும் இந்த வார இறுதிக்குப் பின்னர் படம் வேற லெவலில் பிக்-அப் ஆகும் என்று கூறி, உடன் இருப்பவர்கள் ஆறுதல் சொல்லி வருகிரார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X