பாதி சொத்தைத் தரேன்.. இருக்குற வீடியோவ எல்லாம் கொடுத்துடு.. பெண் பிரபலத்திடம் சரணடைய நடிகர் ப்ளான்?
சென்னை: செய்த சேட்டைக்கு எல்லாம் பிரதி பலனை ஒரு நடிகர் அனுபவித்துக் கொண்டு இருக்கிறாராம். அதுவும் அவர் திருமணத்தை மீறிய உறவில் ஒரு பெண் பிரபலத்துடன் சேர்ந்து கொண்டு செய்த சேட்டையால் அங்கேயும் வாரிசு வயிற்றில் வளர, உடனே நடிகரோ வாரிசைக் கலைக்கச் சொல்லி உள்ளார். ஆனால் அவரோ அதெல்லாம் முடியாது, என்னை பார்த்தால் என்ன கால் கேர்ள் மாதிரி தெரிகிறதா என்று திட்டிவிட்டுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த பெண் பிரபலம் தொடர்ந்து நச்சரித்து வந்ததால் நடிகரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார். வயிற்றில் குழந்தை வளர வளர நடிகரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெண் பிரபலம் நடிகரிடமே இதை நேரடியாக கேட்டுள்ளார். ஆனால் நடிகரோ நான் அப்படி எல்லாம் இல்லை வேலையில் டென்சன் என்று கூறி சமாளித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது முதல் மனைவியே கதி என்று இருந்துள்ளார். இது தொடர்பாக பெண் பிரபலம் நடிகரை தொடர்பு கொண்டால் , அவரது அழைப்புகளை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அவரது மெசேஜ்களுக்கும் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் பிரபலமோ நடிகர் ஷூட்டிங்கில் இருந்த இடத்திற்கே சென்று சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், அங்கு போய் கேட்டதற்கு நடிகரோ அந்த பெண் பிரபலத்தை கடுமையாக தாக்கி உள்ளாராம்.

இரண்டாவது மனைவி: இது இப்படி இருக்கையில் நடிகரும் பெண் பிரபலமும் ஒன்றாக இருந்த போது எடுத்துக் கொண்ட பல வீடியோக்களும் புகைப்படங்களும் அந்த பெண் பிரபலத்திடம் இருந்துள்ளது. இப்படி இருக்கையில் நடிகரின் வாட்ஸ் ஆப்க்கு பெண் பிரபலம் இரண்டு மூன்று வீடியோக்களை அனுப்பி உள்ளார். இந்த வீடியோக்களை பொது வெளியில் பகிர்ந்து விடுவேன் என்றும் எனது கழுத்தில் தாலி கட்டி விட்டாய், நமது குழந்தை வயிற்றில் வளர்கிறது, எனவே நிம்மதியாக வாழ்வதற்கு என்ன வழியே அதைச் செய், இல்லை என்றால் மானத்தை வாங்கி விடுவேன் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாதி சொத்து: பெண் பிரபலம் அனுப்பிய வீடியோக்களை பார்த்த நடிகருக்கு பயம் வந்து விட்டதாம். காரணம் அவரது முதல் மனைவிக்கும் அவருக்கும் பிறந்த குழந்தைகள் தற்போது டீன் ஏஜை எட்டவுள்ளாதால் நடிகர் பதறுகிறாராம். இதனால் பெண் பிரபலத்திடம் பாதி சொத்தை கூட தருகிறேன், வீடியோக்களை கொடுத்துவிடு என்று கேட்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். ஆனால் பெண் பிரபலமோ பணமெல்லாம் வேண்டாம் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











