நடிகைக்கு ஜாக்பாட்.. நடிகரும் மனைவியும் விவாகரத்து தான் வாங்கல.. பேச்சுவார்த்தையிலயே எல்லாம் முடுஞ்சுதாம்!

By Staff

சென்னை: அந்த மாஸ் நடிகருக்கு நடிகை ஒருவர் மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சு பல ஆண்டுகளாக திரைத்துறை வட்டாரத்தில் உள்ளது. ஆனால் அந்த நடிகர் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த நடிகை அந்த நடிகருடன் மிகவும் நெருக்கமான பின்னர், தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகளைக் கூட கழட்டி விட்டுவிட்டாராம்.

இப்படி இருக்கும்போது, இப்போது திரைத்துறையில் உலா வரும் செய்திகள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது அந்த நடிகர் சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்க்கப் போவதாக தீர்க்கமாக முடிவெடுத்தார். நடிகையும் நடிகருக்கு துணையாக தானும் செல்ல முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் நடிகருக்கு அந்த புதிய தொழில் எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கிறது என்பதை வைத்து நடிகையும் அந்த புதுத் தொழிலில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

Tamil Cinema Gossip Actor Who Separate His Wife For Live With Actress

நடிகையுடன் நெருக்கம்: இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னைகள் என்றால் ஒன்று நடிகரின் பெற்றோர்கள், மற்றொன்று நடிகரின் மனைவி. நடிகையை அடைய, நடிகையுடன் அவ்வப்போது கூத்தடித்துக் கொண்டு இருந்த நடிகரை முதலில் கண்டித்தது, அவரது மனைவி. ஆனால் மனைவியை மிரட்டி ஆஃப் செய்துவிட்டார் நடிகர். அதேபோல் நடிகரின் தந்தையும் தாயும் கூடாது எனக் கூறியதற்கு, அவர்களை அப்படியே விலக்கி வைத்துவிட்டார். நடிகை மீது அவருக்கு இருக்கும் மோகத்தால் தனது ரத்த சொந்தங்களை விட்டுவிட்டு நடிகையே கதி என இருக்கிறார் நடிகர்.

ஏமாற்றம்: ஆனால் அந்த நடிகையோ நடிகரைப் பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகரின் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்து வருகிறார். ஆசை 60 நாட்கள் மோகம் 30 நாட்கள் ஆக மொத்தம் 90 நாட்களில் நடிகர் தன்னிடம் திரும்பி வந்துவிடுவார் என நினைத்த மனைவிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

விவாகரத்து: இதனால் கடுப்பான நடிகரின் மனைவி, நடிகருக்கும் தனக்கும் இடையில் உள்ள உறவை முடித்து வைக்கும்படி நடிகரின் அப்பா, அம்மாவிடம் கேட்டுள்ளார். நடிகரும் இதுக்குத்தான் நான் காத்திருந்தேன் என்பது போல நடிகரோ, விவாகரத்து எல்லாம் தர முடியாது, அது என்னோட தொழிலை பாதிக்கும், எனவே இருவரும் பிரிந்து விடலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு சரி எனக் கூறிய நடிகரின் மனைவி, இப்போது தனது அப்பா வீட்டிற்கே சென்று விட்டாராம். இப்போது நடிகரின் மனதிற்கு நெருக்கமான நடிகைக்கு ஜாக்பாட் அடித்தது போல உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X