ஹாட்ரிக் ஹிட் கொடுத்த தெம்பு.. நடிகர் எடுத்த சரவெடி முடிவு.. இனி கையிலயே பிடிக்க முடியாது போலயே!
சென்னை: இந்த நடிகர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தே சில ஆண்டுகள் தான் இருக்கும். ஆனால் இவர் இன்றைக்கு அடைந்துள்ள உயரம் இவர் காலத்தில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்களைக் காட்டிலும் ரொம்பவும் அதிகம். இப்படி இருக்கும்போது நடிகர் நடித்த மூன்றாவது படமும் ஹிட் ஆன பின்னர் அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இது தயாரிப்பாளர்களுக்கு பகீர் கிளப்பியுள்ளது.
அதாவது இவர் நடிகராக தனது கெரியரை தொடங்கியவர் இல்லை. மாறாக இவர் முதலில் இயக்குநராகத்தான் கெரியரை தொடங்கினார். தனது இரண்டாவது படத்தில் கதாநாயகனாக நடித்து தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். முதல் படத்தில் பாராட்டுகள் நிறைந்த படத்தை தருவது என்பது கவனத்தை ஈர்த்தாலும், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி ஈட்டி தயாரிப்பாளரிடம் கொடுத்தார் இவர்.
நடிகராக முதல் படத்தில் கமிட் ஆகும்போதே லாபத்தில் பங்கு கொடுத்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்றுதான் நடிகராக கமிட் ஆனார். முதல் படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இப்போது நடிகருக்கு அடித்த ஜாக்பாட் என்னவென்றால், அவருக்காக கதை எழுத பல இயக்குநர்கள் தயாராகிவிட்டார்கள், அவரை கதாநாயகனாக வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளார்கள்.

கல்லா கட்டும் படங்கள்: இப்படி இருக்கும்போது, நடிகருக்காகவே கதை எழுதி சென்ற இயக்குநரின் படமும் பிரமாண்டமான வெற்றியைப் பெற, அடுத்து வெளியாகியுள்ள படத்தின் கதையையே அந்த நடிகருக்கு தான் அந்த இயக்குநர் உருவாக்கி உள்ளார். பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர், இந்த படத்தில் நடிகரை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். இந்த படத்தில் நடிகர் தனக்கு சம்பளம் மட்டுமே பேசியுள்ளார்.
சரவெடி முடிவு: இப்படி இருக்கும்போது இந்த மூன்றாவது படமும் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது என்ற பேச்சுக்கள் மெல்ல மெல்ல தலை தூக்குகிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இந்த படம் முந்தைய படங்களை விட நன்றாகவே கல்லா கட்டுகிறது என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, தனது படத்திற்கு நன்றாகவே கல்லா கட்டுகிறது என்று தெரிந்து கொண்ட நடிகர், தனது அடுத்த படத்தில் இருந்து சம்பளத்தை அதிகரிக்கச் செய்வது மட்டும் இல்லாமல், லாபத்தில் 20 முதல் 30 சதவீதம் பங்கு கேட்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம். இந்த பேச்சுதான் இப்போது சரவெடியாக திரைத்துறையில் ஓடிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கும்போது தயாரிப்பாளர்கள் தான் பாவம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











