பொங்கல் வரைக்கும் பொறுமையா இருங்க சாமி.. தூண்டில் போட்டவரிடம் சிக்னல் கொடுத்த நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி கொஞ்சம் மக்கள் மத்தியில் தங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் கிடைத்துவிட்டால், அதுவும் நிலையான ரசிகர்கள் பட்டாளம் அமைந்து விட்டால், உடனடியாக அவர்கள், சினிமாவில் இருந்து தங்களது வாகனத்தை அரசியலுக்கு தான் திருப்புவார்கள். இது நாடறிந்த உண்மை. அதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இப்படி இருக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த மாஸ் நடிகர் ஒருவர், தற்போது பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் கட்சி ஆரம்பித்தபோது பல கட்சியினரையும் போட்டு தாக்கு தாக்கு என தாக்கினார். அதுவும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டு கொண்டு இருக்கும் கட்சியினரை அட்டாக் செய்து வந்தார். இதில் குறிப்பாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியினரைப் போட்டு தாக்கு தாக்கு என தாக்கிவிட்டு, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியினரை, ஒரு படத்தில் குஷ்பு வடிவேலுவை அடிப்பாரே அதுபோல அடிப்பது போல விமர்சித்து வந்தார்.
இப்போது என்ன பிரச்னை என்றால், இந்த நடிகர் பிரச்சாரத்துக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் இறந்து போனார்கள். இந்த விவகாரம் மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நெரிசல், அதனால் உயிரிழப்புகள் என இது போன்றவற்றை எதிர்பார்க்காத நடிகருக்கு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் தான். இந்நிலையில் அவரது இந்த வேதனைக்கு ஆறுதல் கூறுகிறோம் என்று சில கட்சிகள் அந்த நடிகருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இரண்டு கட்சிகள் மட்டும், கொஞ்சம் இறங்கிப் போய், உடைத்தே பேசியுள்ளார்கள்.

கூட்டணி பேச்சு: இதில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த கட்சியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், கூட்டணிக்கு வாங்க உங்களுக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்று பேசியுள்ளார். நடிகரோ பொங்கல் முடியட்டும் அதன் பின்னர் இது குறித்து நாம் மீண்டும் பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாராம். அதாவது பொங்கலுக்கு நடிகரின் படம் வெளியாகவுள்ளதால், பொங்கல் வரைக்கும் அரசியலாக எந்த முடிவுகளையும் எடுக்காமல், தனது கட்சி வேலைகளை மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்ததன் விளைவுதான் நடிகர் அப்படி பேசக் காரணமாம்.
நடிகர் போட்ட பிளான்: பொங்கலுக்குப் பின்னர் நடிகர் கூட்டணி என்று அந்த இரண்டு கட்சிகளுடன் இணைந்தால், அவரது அரசியல் அங்கேயே முடிந்துவிடும் என்றும் சிலர் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரின் பணம் வீணாக போக கூடாது என்று அவர் யோசிப்பதும் சரி தானே என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் உலா வருகிறது.


Click it and Unblock the Notifications











