மாமியார் தொல்லை தாங்கல.. காலியான பர்ஸ்.. கடுப்பில் நடிகர் எடுத்த விபரீத முடிவு!
சென்னை: இந்த நடிகர் மனைவி சொல்வதற்கு மட்டும் இல்லாமல் மாமியார் சொல்வதற்கும் சேர்த்து தலையாட்டியதால் திவாலாகி நிற்கிறாராம். இதனால் நடிகர் எடுத்த முடிவு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. நடிகர் காதல் திருமணம் செய்து கொண்டவர்தான். பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் தனது வருமானத்தைக் கொண்டு அவரால் தான் நினைத்ததை கூட செய்ய முடியவில்லையாம்.
அதாவது நடிகர் திருமணத்திற்கு முன்னர் அவரது சம்பளத்தை அவரது அப்பாவிடம் கொடுத்து விடுவாராம். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவரது வரவு செலவு கணக்குகள் எல்லாம் அவரது மனைவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதில் என்ன பிரச்னை என்றால் நடிகரின் வங்கிக் கணக்கிற்கு வரவு செலவு இருந்திருந்தால் பரவாயில்லை. நடிகரின் மனைவியோ, தனது வங்கிக் கணக்கை கொடுத்து நடிகரின் சம்பளத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லி விடுவாராம்.
நடிகர் எங்காவது வெளியே சென்றால், சில லட்சங்கள் வரை மட்டுமே பயன்படுத்தும் கிரெடிட் கார்டுதான் நடிகரிடம் கொடுத்து உள்ளார்கள். இந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நடிகர் ஏதாவது செலவு செய்தால் கூட நடிகரின் மனைவி ஏகப்பட்ட குடைச்சல் கேள்விகளைக் கேட்டு, டென்ஷன் ஆக்கிவிடுவாராம். இந்த டென்ஷன் கேள்விகளை எதிர் கொள்வதற்கு அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தாமலே இருந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாராம்.

கூடுதல் தலைவலி: இதில் ஒரு கட்டத்தில் நடிகரின் மனைவி தன்னால் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை எனவே தனது அம்மாவிடம் இந்த வேலைகளை தருவதாக கூறியுள்ளார். நடிகரின் மாமியார் வசம் எல்லாம் வந்த பின்னர், அவர் நடிகருக்காக சம்பளம் பேசுவதில் தொடங்கி பல விஷயங்களில் சண்டை சச்சரவுகளை உருவாக்கி உள்ளார்.
மாமியார் தொல்லை: இதனால் நடிகருக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் கொஞ்சம் பெயர் அடி வாங்க ஆரம்பித்துள்ளது. மாமியார் வசம் வரவு செலவு கணக்கு சென்ற போது நடிகரின் படம் ஒன்று மிகப்பெரிய வெற்றியை குவித்தது. இதைப் பார்த்த மாமியார், நடிகரை வைத்து தானே தயாரிக்க முடிவெடுத்து இரண்டு படங்களைத் தயாரித்துள்ளார். இரண்டு படங்களும் கணிசமான வெற்றியை ஈட்டியுள்ளது.
விவாகரத்து முடிவு: ஆனால் நடிகரின் மாமியாரோ இரண்டுக்கும் நஷ்டக் கணக்கு காட்ட, நடிகர் செம கடுப்பு ஆகி உள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் நடிகருக்கும் மாமியாருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பெரிய பிரச்னையால் நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து காய்களை நகர்த்தி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











