நடிகைக்கு ஆசைப்பட்டு பகையை வளர்த்துக் கொண்ட நடிகர்.. அவசரப்பட்டுட்டாரே!
சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் கொஞ்சம் மார்க்கெட் உள்ள நடிகர். இப்போது நடிகர் கண் அசைத்தால் அவருக்கு வேண்டியவை சகலமும் அவரது கேபினுக்கு வந்துவிடும். இப்படி இருக்கும்போது, நடிகர் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதும் கொஞ்சம் ஆட்டம் போட்டுள்ளார். இதனால் திரைத்துறையில் நடிகர் பகையை வளர்த்துக் கொண்டுள்ளாராம்.
அதாவது இந்த நடிகர் பொதுவாகவே ஜனரஞ்சகமான படங்களில்தான் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படி இருக்கும்போது நடிகருக்கு ரசிகர்கள் படத்திற்கு படம் பெருகிக் கொண்டே இருந்தார்கள். இப்படி இருக்கும்போது, நடிகரின் இரண்டு படங்கள் ஹிட் அடித்ததும், மூன்றாவது படத்திற்கு நடிகையை ஒருவரை கமிட் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இது தொடர்பாக நடிகரிடம் எதுவும் கலந்தாலோசிக்காமல், இந்த நடிகை ஓ.கே. சொல்லி உள்ளார்கள், நடிகையை முடிவு செய்த பின்னர் நடிகரிடம் தயாரிப்பு நிறுவனம் அழைத்து விஷயத்தைச் சொல்லி உள்ளது.

இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகர், கொஞ்சம் ஷாக் ஆகி உள்ளார். இப்படி இருக்கும்போது, தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகையுடன் எனக்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தயாரிப்பு நிறுவனம், இவர் அட்ஜெஸ்மெண்ட்டைத்தான் இப்படி கேட்கிறாரோ என்று சந்தேகப்பட்டுள்ளது. ஆனாலும், வளர்ந்து வரும் நடிகர் இவர், புக் செய்ததாக சொல்லி உள்ள நடிகையோ ஏற்கனவே ஸ்டார் அந்தஸ்தில் உள்ள இளம் நடிகை, எனவே அட்ஜெஸ்மெண்ட்க்கு எல்லாம் சான்ஸே இருக்காது என்று நினைத்து, மீட்டிங்கிற்கு ஒ.கே சொல்லி ஏற்பாடும் செய்துள்ளார்கள்.
நடிகைக்கு ஆசைப்பட்டு: இதன் பின்னர்தான் சம்பவமே நடைபெற்றுள்ளது. அதாவது, நடிகர் நடிகையை சந்தித்த பின்னர், கொஞ்ச நேரத்திலேயே, தனது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துள்ளார். இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை, உடனே நடிகரிடம் கடிந்து கொண்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்துக்கும் போன் போட்டு கத்தி விட்டுள்ளார். இப்படி இருக்கையில் தயாரிப்பு நிறுவனமோ நடிகரை நேரில் அழைத்து, அடிக்காத குறையாக மிரட்டி விட்டுள்ளார்கள்.
பகை: நடிகரின் இந்த கேவலமான செயலால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் கெட்ட பெயர் வந்து விட்டதே என்று தயாரிப்பாளர் செம கோபத்தில் இருந்துள்ளார், இது மட்டும் இல்லாமல், படத்திற்கு நடிகருக்குக் கொடுத்த அட்வான்ஸை மொத்தமாக திருப்பி வாங்கிவிட்டு, இனிமேல் எங்கள் அலுவலத்தின் பக்கம் வந்து விடாதே என்று எச்சரித்து அனுப்பியுள்ளார்களாம். நடிகைக்கு ஆசைப்பட்டு, திரையுலகில் பகையை நடிகர் வளர்த்துக் கொண்டுள்ளது குறித்த பேச்சுக்கள் அவ்வப்போது தலை தூக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications











