காசுக்காக இப்படி ஒரு வேலையைப் பார்த்துவிட்ட நடிகை.. கழுவி ஊத்தினாலும் திருந்தமாட்டங்கபோலயே!
சென்னை: இவர் நடிகை மட்டும் இல்லாமல் நடிகரின் மகள். இவரது தந்தை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். ஆனாலும் சின்னத்திரையிலும் தலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். இதனால் இவரது குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் குறித்த தகவல்கள் என்பது ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரிந்ததுதான்.
இப்படி இருக்கையில் அந்த நடிகை தனது சமூக வலைதளங்களில் அவரது வருமானத்தை ஈட்டி வருகிறார். இப்படி இருக்கும்போது அவரது சமூக வலைதளங்களில் சில பொருட்களுக்கு விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் தனது வருமானத்திற்காக செய்த வேலையால் பலரும் அவரை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள். நடிகையின் தந்தையின் முகத்திற்காகத் தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம், இல்லை என்றால் அந்த நடிகை டரியல் ஆகும் அளவுக்கு விமர்சித்து விடுவோம் என்றும் கூறி வருகிறார்கள்.

பணத்துக்காக: அதாவது நடிகை என்ன செய்துள்ளார் என்றால், ஒருவர் தனது வருமானத்தை அதிகரிக்க தனது தொழிலை பரப்ப சில இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளவர்களுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து தனது தொழில் குறித்து பிரபலப்படுத்த சொல்லி உள்ளார். பணம் வந்துவிட்டது, வேலையைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்த நடிகை, வீட்டில் இருந்த தனது வீட்டுக் காரரையும் கூட்டிக் கொண்டு போய் தனது கண்டெண்டுக்கு பயன்படுத்தி உள்ளார். இந்த நடிகை சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது கை குழந்தையை வைத்து ஒரு பிராண்டுக்கு புரோமோசன் செய்தார். இதனால் இணையவாசிகள் அந்த நடிகையை கண்டபடி விமர்சித்தார்கள்.
திருந்தாத நடிகை: ஆனால் நடிகை திருந்தியபாடில்லை என்பதற்கு சான்றாக தான் நடிகை தற்போது இப்படி ஒரு வேலையைச் செய்துள்ளார். இதனால் அவரை மேலும் ரசிகர்களும் இணையவாசிகளும் போட்டு வெளுத்து வருகிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடிகை இனி வரும் காலங்களிலும் இது போல மூடத்தனமான செயல்களை செய்து வந்தால் அவரது அப்பாவின் முகத்திற்காக எல்லாம் பார்க்க மாட்டோம், தர லெவலுக்கு இறங்கி கலாய்ப்போம் என்று பேசி வருகிறார்கள். நடிகை இனிமேலாவது திருந்தி ஒழுக்கமாக இருப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











