நடிகை போட்ட கறார் உத்தரவு.. தலைவிதினு தயாரிப்பாளர் பார்த்த வேலை.. பஞ்சாயத்து முடியாது போலயே!

By Staff

சென்னை: அந்த நடிகருக்கும் இந்த நடிக்கைக்கும் ஏற்கனவே பெரிய பிரச்னை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட நடிகையின் ஓவர் ஆட்டிடியூட் பார்த்து பலரும், இவ்வளவு மோசமாக அந்த நடிகை நடந்து கொள்கிறாரே என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நடிகையின் டார்ச்சர் தாங்க முடியாமல் தயாரிப்பாளர் ஒருவர் தலைவிதியேன்னு ஒரு வேலையைப் பார்த்துள்ளாராம்.

அதாவது அந்த நடிகர் நடித்த படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நடிகருக்கு அவரது சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களால் ஃபேமிலி ஆடியன்ஸ் என்பது இல்லாமல் இருந்தது. ஆனால் நடிகரின் இந்த படம் மீண்டும் அவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸை உருவாக்கிவிடும் என்பதைப் போன்ற பேச்சுகள் அடிபட்டதும் நடிகை பயங்கரமான வேலையை ஒன்றைப் பார்த்துள்ளாராம்.

Tamil Cinema Gossip Actress Push To Producer To Release Her Movie Update Immediately

நடிகையின் திட்டம்:அதாவது நடிகை உடனே தனது படத்தின் தயாரிப்பாளருக்கு போனைப் போட்டு, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நமது படத்தின் புதிய அப்டேட் ஒன்று நாளை வெளியாகியே ஆகவேண்டும் என்று சத்தம் போட்டுள்ளார். நடிகையிடம் இருந்து இப்படி ஒரு போன் கால் வரும் என்று தயாரிப்பாளர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருக்கும்போது உடனே தயாரிப்பாளர் இயக்குநருக்கு போனைப்போட்டு, நாளைக்கு படத்தின் அப்டேட் ஏதாவது ரிலீஸ் செய்து ஆகவேண்டும் ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க என்று கேட்டுள்ளார். நடிகை அப்படி பேசக் காரணமே, நடிகரின் படம் குறித்து இணையத்தில் டிரெண்ட் ஆகும்போது தனது படத்தின் அப்டேட்டும் டிரெண்ட் ஆகவேண்டும் என்பதுதானாம்.

தலைவிதி: உடனே இயக்குநரும், நாம இன்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்யவில்லை, எனவே நாம் அதை ரிலீஸ் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளருக்கோ இதுக்கு எல்லாம் கொஞ்சம் கூட உடன்பாடே இல்லையாம். காரணம் அவர் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் மிகவும் பிரமாண்டமாக செய்ய திட்டமிட்டிருந்தாராம். ஆனால் நடிகை கத்திய கத்தில் இப்படி உப்பு சப்பு இல்லாத அப்டேட்டை கொடுத்து விட்டோமே என்று புலம்பிக் கொண்டு இருக்கிறாராம். இப்படி புலம்பிக் கொண்டு இருந்த தயாரிப்பாளருக்கு வேண்டப்பட்டவர்கள் போன் செய்து இதுதான் விஷயம் என்று சொல்ல, நடிகரை பழிவாங்கும் எண்ணத்தில் நமது முதலீட்டில் நடிகை விளையாடிக் கொண்டு இருக்கிறாரே என்று செம கடுப்பில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X