மூன்று நடிகர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு இயக்குநர் தலையில் மிளகா அரைத்த நடிகை.. பலே கில்லாடிதான்!

By Staff

சென்னை: இந்த நடிகை அண்டை மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். வந்த புதிதில் நடிகைக்கு ஹோம்லி கதாபாத்திரங்களாகவே கிடைத்துக் கொண்டு இருக்க, நடிகை இயக்குநர்களிடம் சண்டை செய்து தனக்கு கிளாமர் காட்சிகள் வைக்கச் சொல்லுவாராம். நடிகையின் இந்த ஆர்வத்தை கேள்விப்பட்ட சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நாங்க இருக்கோம் என்று சொல்லிக் கொண்டு நடிகையை அலேக்காக தங்களது படங்களில் புக் செய்துள்ளனர்.

நடிகையின் ஆர்வத்தை பார்த்த நடிகர் ஒருவர் நடிகையுடன் இணைந்து நடித்தார். நடிகரின் துடிப்பான நடவடிக்கைகளைப் பார்த்து நடிகை, நடிகரை தனது வலையில் வீழ்த்த, நடிகரும் நடிகை ஜம்முனு இருக்கிறார் என நடிகை இழுத்த இழுப்புக்கு எல்லாம் சென்றுள்ளார். நடிகை தனது ஆசை தீர முழுவதுமாக அனுபவித்து விட்டு ஜாலியாக இருந்து உள்ளார் நடிகர். யார் கண்ணு பட்டுச்சோ நடிகையும் நடிகரும் பிரிந்து விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று நடிகருக்கு கொஞ்சம் கூட மட்டுப்படவில்லையாம்.

Tamil Cinema Gossip Actress Who Cross Three Actors For Money And Finally Commit With Director

இரண்டாவது வலை: இப்படி இருக்கையில் நடிகை இன்னொரு சீனியர் நடிகர், ஏற்கனவே திருமணமாகி தகப்பனாக இருந்த நடிகர் படத்தில் நடிக்க, நடிகருடன் ஏற்பட்ட பழக்கம் கொஞ்சம் ஓவர் பழக்கமாக போக, நடிகையும் நடிகரும் வெளிநாடுகளில் மட்டுமே மீட்டிங் என்று வரை முறைகளை வகுத்து சந்தித்து வந்துள்ளனர். ஆனாலும் இவர்களின் வெளிநாடு லூட்டி, வெளியே தெரியவர, இருவரும் அட ரொம்ப வசதியா போச்சு என்பது போல ஜாலியாக உள்ளூரிலேயே ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார்கள். நடிகரின் மனைவிக்கு விஷயம் தெரிந்து இவர்களின் ஆட்டத்தை கலைத்து விட, இந்த நடிகரை விட்டு நடிகை பிரிய நேர்ந்தது.

பெரிய தொகை: அதன் பின்னர் ஒரு பணக்கார நடிகர், இத்தனைக்கும் அவர் தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்தவர். அவருடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க, நடிகரோ நடிகை சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் தலையாட்டி பொம்மை போல மாறி விட்டாராம். அதன் பின்னர் நடிகை ரொம்பவும் டேஞ்சர் பார்ட்டி என்று நடிகரின் குடும்பத்தார் எச்சரிக்க, நடிகைக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து செட்டில்மென்ட் முடித்துள்ளார்கள்.

இயக்குநர் உடன் செட்டில்: அதன் பின்னர் நடிகை வயசு அதிகமாகிக் கொண்டே போகிறது, இதற்கு மேல வண்டி ஓடுறது கஷ்டம் என்று முடிவெடுத்து நடிகை தான் நடித்த படத்தின் இயக்குநருடன் காதலில் விழுந்து இயக்குநருடன் செட்டில் ஆகிவிட்டாராம். விஷயத்தை கேள்விப்பட்டவர்கள், நடிகை ரொம்பவும் ஆடிவிட்டார் போல, இயக்குநர் தான் பாவம் என்று பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X