அக்கட தேசத்து நடிகரை நம்பி வாழ்க்கையைத் தொலைத்த நடிகை.. குடும்பத்தை பற்றி தெரிந்தும் குழியில் விழுந்துட்டாரே
சென்னை: இந்த நடிகை நல்ல திறமையான நடிகை தான். நடிப்பு, நடனம் , ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கும் நடிகை. தென்னிந்திய சினிமாவில் டாப்பில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நடிகை காதல் வலையில் விழுந்து, அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்னைகளால் தனது வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து நிற்கிறார்.
அதாவது நடிகை அக்கட தேசத்து படத்தில் நடித்த போது அங்கு ஒரு நடிகருடன் ஏற்பட்ட பழக்கத்தால், நடிகை தனது வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு சென்று விட்டார். அதாவது நடிகரையே திருமணம் செய்து கொண்டார். இது மட்டும் இல்லாமல் நடிகர் ஒரு பெரிய நடிகரின் மகனும் வேறு. சினிமா குடும்பத்துக்குத்தான் வாக்கப்படுகிறோம் நமது சினிமா வாழ்க்கைக்கு அவை எந்த வகையிலும் பாதிப்பாக இருக்காது என்று நடிகை நம்பிக் கொண்டு இருந்தார். ஆனால் அங்குதான் பிரச்னையே தொடங்கி உள்ளது.

நடிகையின் மாமனார்: அதாவது நடிகை சினிமாவில் நடிப்பது என்பது பணத்திற்காக இல்லை, நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால்தான். இப்படி இருக்கும்போது நடிகை திருமணத்திற்குப் பின்னர் நடித்த சில படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்சிகளில் நடிக்க வேண்டியதாக மாறிவிட்டது. இந்த காட்சிகளில் நடித்தது நடிகையின் கணவரின் அப்பாவுக்கு பிடிக்கவில்லையாம். 10 தலைமுறைக்கு சொத்து உள்ளது, எதற்காக இப்படியான காட்சிகளில் நடித்து நமது குடும்பத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்று நடு வீட்டில் நிறுத்தி நடிகையை ஒரு ரைய்டு விட்டுள்ளார்.
பிரச்னைகள்: இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை, தனது கணவர் மற்றும் அவரது அப்பாவுடன் காட்டுக் கத்து கத்தி பிரச்னை செய்துள்ளாராம். தன்னையும் தனது தந்தையையும் எதிர்த்து பேசியதால் நடிகையை விவாகரத்து செய்ய முடிவெடுத்த நடிகர், கடைசியில் அதையும் அரங்கேற்றம் செய்துவிட்டு, வேறு ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நடிகையோ தனது கெரியரில் கவனம் செலுத்தி இன்றைக்கு இந்தியாவில் மோஸ்ட் வான்டட் நடிகை பட்டியலுக்கு உயர திட்டம் போட்டு வருகிறாராம். நடிகை முதலில் அந்த நடிகரைத் திருமணம் செய்யும்போது அந்த நடிகரின் குடும்பம் ஒரு மாதிரி, எதற்கும் நன்றாக யோசித்து முடிவு செய்து கொள் என்று அறிவுரை கூறியவர்கள் எல்லாம், இப்போது நடிகைக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











