தம்பியால் வந்த வினை.. விட்டுப் போக முடிவெடுத்த மனைவி.. விரக்தியில் இருக்கும் பிரபலம்!
சென்னை: இந்த பிரபலம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே இயக்குநராக கொடி கட்டிப் பறந்தவரின் வாரிசுதான். என்னதான் அப்பா இயக்குநர் என்றாலும் இவரும் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதுவும் குறிப்பாக இவர் முதலில் இயக்குநராக கெரியரைத் தொடங்கி, இப்போது நடிகராகவும் உயர்ந்து நிற்கிறார். இப்படி இருக்கும்போது அவரது சொந்த வாழ்க்கையில் பெரும் சோகம் ஒன்று சூழ்ந்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது இவரது இயக்கத்தில் வெளியான படங்களை அவரது ரசிகர்களால் தான் முதல் முறை படத்தைப் பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் அவர்களுக்குமே டஃப் கொடுக்கும் வகையில் திரைக்கதையை அமைத்து வைத்திருப்பார். இப்படி இருக்கும்போது, சினிமா ரசிகர்கள் இவரது படத்தை இரண்டு மூன்று முறை பார்த்தால்தான் அதில் அவர் வைத்திருக்கும் ஹிட்டன் லேயர் தெரியவரும். இப்படி இருக்கையில் இவருக்கு இவரது தம்பியால் இப்போது பெரிய பிரச்னையே வந்து உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

தம்பியால் வந்த வினை: இவர் இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் கோலோச்சி வருகிறார் என்றுதான் கூறவேண்டும். நடிகராக இவர் நடித்த படங்களும் பெரும் கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், வெற்றிகளையும் குவித்துள்ளது. இப்படி இருக்கையில் அவரது தம்பிக்கு இருந்த கெட்டப் பழக்கம் ஒன்றை இப்போது அவரும் பின்பற்றி வருகிறாராம். இதற்கு முழுமுதற் காரணமே அவரது தம்பி தானாம். படப்பிடிப்புத் தளத்தில் அண்ணனுக்கு அவரே சில நேரங்களில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாராம். இப்படி இருக்கும்போது, இது குறித்து தெரிந்து கொண்ட பிரபலத்தின் மனைவி அவரைப் போட்டு தாளித்து எடுக்கத் தொடங்கி உள்ளார்.
விவாகரத்து முடிவு: ஒரு கட்டத்தில் பிரபலம் போதையில் உச்சத்தில் இருக்கும்போது தனது மனைவியிடம் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டதாகவும், அடிக்கடி சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், வசைச் சொற்கள் ஏராளமாக பயன்படுத்திதான் பேசுகிறார் என்றும் கூறி, இப்போது பிரபலத்தை விட்டு விலகி, தனது பெற்றோர் வீட்டில் இருக்கிறாராம். இந்த பிரச்னையால், பிரபலத்தின் மனைவி விவாகரத்து பெற்றுவிடலாம், பிரபலம் திருந்த மாட்டார் என்று முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











