விழி பிதுங்கிய நடிகர்.. புது பயணத்தில் நடிகையின் ஐடியா?.. நடக்கும் கூத்துக்களுக்கு அம்மணிதான் காரணமாம்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்று கொண்டாடப்படும் நடிகர் புதிய பயணத்தில் இப்போது இருக்கிறார். அந்தப் பயணம் அவர் எதிர்பார்த்ததுபோல் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆரம்பித்த சில காலத்திலேயே அடி மேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. இதனால் விழி பிதுங்கி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருக்கும் அவர் அடுத்தது என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.

கோலிவுட்டில் இந்த நடிகர் அறிமுகமானபோது சந்திக்காத விமர்சனங்களும், கிண்டல்களும் இல்லை. அதையெல்லாம் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து படிப்படியாக முன்னேறி தனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஒருகட்டத்தில் உச்ச நடிகரின் நாற்காலியையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. நடித்த ஒவ்வோரு படமும் அசால்ட்டாக பல நூறு கோடிகளை கல்லா கட்டியது.

ரசிகர்களின் ஆசை: சினிமாவில் தான் பெற்ற அபரிமிதமான வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல திட்டமிட்டார் அவர். அதற்காக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். ஒருகட்டத்தில் புதிய பயணத்தை அவர் தொடங்க வேண்டும் என்று நடிகரின் ரசிகர்கள் ஆசையை வெளிப்படுத்தினார்கள். அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரும் அந்தப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்.

Kollywood Gossip is Tamil Mass Hero Faces Major Setback in His New Journey Actress s Influence Raises

எதிர்பார்த்ததுபோல் இல்லை: புதிய பயணம் தனக்கு ரொம்பவே நல்லபடியாக இருக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால் அவரது அலட்சியம், வழிகாட்டுதல் இல்லாமை என அனைத்தும் சேர்ந்து பலத்த அடியை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. நடந்த அசம்பாவிதம் ஒருபக்கம், குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னை ஒருபக்கம், நடிகையுடனான தொடர்பை வைத்து எழும் விமர்சனம் மறுபக்கம் என மும்முனை கத்தி அவரை தாக்க ஆரம்பித்திருக்கிறது.

இருந்தாலும் விடாத நடிகர்: எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அந்த நடிகையுடனான பழக்கத்தை மட்டும் நடிகர் நிறுத்தவே இல்லையாம். சமீபத்திய அசம்பாவிதம் நடந்த பிறகு இவரோ வெளியே தலைகாட்டவே இல்லை. சரி அவரது வீட்டில் இருப்பார் என்று பார்த்தால் நடிகையின் வீட்டில்தான் தஞ்சம் அடைந்தாராம். நடிகையும் நடிகருக்கு தன்னால் முடிந்த அளவுக்கு ஆறுதலையும், சேவையையும் அளித்தாராம்.

நடிகை கொடுத்த ஐடியா?: இவை அனைத்தையும் தாண்டி நடிகர் ஆரம்பித்திருக்கும் புதிய பயணத்துக்கான ஐடியாவையும் அம்மணி இப்போது கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். அதாவது, 'நீங்கள் வெளியே சென்றால் மீண்டும் ஏதாவது நடந்துவிடும். முக்கியமாக எதிர்தரப்பினர் உங்களுக்கு மேற்கொண்டு சில சிக்கல்களை கொண்டு வரலாம். எனவே நீங்கள் வெளியே செல்லாமல் இங்கே பக்கத்திலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை செய்யுங்கள்' என கூறினாராம்.

இது நடிகருடன் இருக்கும் மற்றவர்களுக்கு பெரிய ஷாக்கை கொடுத்ததாம். அவர்கள் நடிகரிடம், வேண்டாம் அப்படி செய்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்று சொல்லியும்; நடிகைக்கு மயங்கிய நடிகர் அந்த ஐடியாவையே இப்போது செயல்படுத்த தொடங்கிவிட்டாராம். அதன் வெளிப்பாடுதான் இப்போது நடந்துகொண்டிருக்கும் கூத்துக்கள் அத்தனையும் என கோலிவுட்டில் விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X