கோடிகளை இறக்கிய தயாரிப்பாளர்.. சரினு தலையாட்டிய நடிகை.. எல்லாமே முடுஞ்சுதாம்!
சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, மலையாள சினிமா என்று தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டு இருந்தவர்தான். தமிழில் அறிமுகமான சில ஆண்டுகளுக்குள்ளாகவே பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் ஒருவர் கோடிகளைக் கொட்டி நடிகையை தான் நினைத்த காரியத்திற்கு தலையாட்ட வைத்துள்ளாராம்.
இந்த நடிகை நடிப்பில் திறமையான நடிகை என்பதில் யாருக்கும் சந்தேகம் வராது. ஒடு பீரியாடிக் படத்தில் நடிகையின் நடிப்பைப் பார்த்து பலரும் மிரண்டு போனார்கள். ஆனால், மார்க்கெட்டில் நீடிக்க நடிப்புத் திறமை மட்டும் போதாது, கொஞ்சம் திறந்த மனசும் வேண்டும் என்று, நடிகை கிளாமரிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.
அதுவும் குறிப்பாக நடிகை இந்தியில் கால் வைத்ததும் ஓவர் கிளாமர் காட்சிகளில் நடிக்க தொடங்கிவிட்டார். தமிழிலும் தெலுங்கிலும் பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தும் வருகிறார். ஆனால் தமிழிலும் தெலுங்கிலும் இல்லாத அளவுக்கு இந்தியில் ஓவர் கிளாமர் காட்சிகளில் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஓவரான கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இப்படி இருக்கும்போது இயக்குநர் ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளார். மேலும் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வயதான நடிகர் ஒருவரைக் கமிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று, கூறியுள்ளார்.

நடிகைக்கு வலை: தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி உள்ளார். மேலும் கதாநாயகியாக இந்த நடிகையை தான் அவர் யோசித்து இயக்குநரிடம் சொல்லி உள்ளார். இயக்குநரும் ஓ.கே. சொல்லி உள்ளார். அதன் பின்னர் நடிகரிடம் கதையைச் சொல்லி கலந்து பேசி உள்ளார்கள். நடிகரும் ஒ.கே. சொல்லி உள்ளார். இப்படி இருக்கும்போது, இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகையிடம் கதையைச் சொல்லி நடிகையை படத்தில் கமிட் செய்துவிடலாம் என்று சென்றுள்ளார்கள். ஆனால் நடிகையோ கதையை கேட்டுவிட்டு, கதை நன்றாக உள்ளது, ஆனால் என்னிடம் தேதிகள் இல்லை என்று கூறியுள்ளார்.
கோடிகளைக் கொட்டிய தயாரிப்பாளர்: ஆனால் உண்மையான காரணம், அவ்வளவு வயதான நடிகருக்கு எப்படி ஜோடியாக நடிப்பது என்பதுதான் பிரச்னையாம். ஆனால் தயாரிப்பாளரோ நடிகை வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து சுமார் 2 கோடிகள் வரை சேர்த்துக் கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்க நடிகை அதன் பின்னர் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள், தயாரிப்பாளர் கோடிகளைக் கொட்டிக் கொடுத்தே காரியத்தை சாதித்து விட்டார் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











