மாஸ் நடிகரை டரியலாக்க உச்ச நடிகர் போட்ட பக்கா பிளான்.. சரியான வில்லங்கமா இருக்கே!

By Staff

சென்னை: உச்ச நடிகருக்கும் மாஸ் நடிகருக்கும் இருக்கும் தொழில் போட்டி என்பது இருவருக்கும் இடையில் பனிப் போரை உருவாக்கி உள்ளது. இப்படி இருக்கையில் மூத்த நடிகராக உள்ள உச்ச நடிகர் திரையுலகில் இருந்து கொண்டு அவர் அரசியலிலும் கால் பதிக்க திட்டம் வகுத்து வந்தார். அதற்கு அவருக்கு ஒரு தேசிய அளவிலான கட்சி ஊக்கம் அளித்து, நம்பிக்கை கொடுத்து வந்தது. நடிகரும் வேறு வழி இல்லாமல் கட்சி சொன்ன சொல்லுக்கு ஆட்டம் போட்டு வந்தார்.

கடைசி நேரத்தில் அவர் என்ன நினைத்தாரோ என்னவோ, அரசியலும் வேண்டாம், பதவிகளும் வேண்டாம் என முடிவெடுத்து மீண்டும் சினிமாவே போதும் என்று முடிவு செய்தார். இப்படி இருக்கையில், உச்ச நடிகர் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் பக்கம் தலை வைத்து படுக்கிறார், இனி சினிமாவில் நம்ம ராஜ்ஜியம்தான் என்று நினைத்துக் கொண்டு இருந்த மாஸ் நடிகருக்கு அதிர்ச்சியாக அமைந்தது, உச்ச நடிகர் மீண்டும் சினிமாவுக்கே வந்தது.

Tamil Cinema Gossip Top Actor Plans To Attacks Mass Actor At 2026 Election

போட்டி: இப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தொழில் போட்டி என்பது இருவருக்கும் இடையில் பனிப் போரையும் அவர்களது ரசிகர்களுக்கு மத்தியில் வார்த்தை போரையும் ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் மாஸ் நடிகர் அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்புகிறார் என்று பேச்சு லைட்டாக எழுந்ததும் உச்ச நடிகர் தனது ரசிகர்களை அவ்வப்போது மாஸ் நடிகருக்கு எதிராக திருப்பி விட்டு வந்தார். இதனால் மாஸ் நடிகரின் ரசிகர்களுக்கும் உச்ச நடிகரின் ரசிகர்களுக்கும் பெரும் வார்த்தைப் போர் நடைபெற்றும் வருகிறது.

பிளான்: மாஸ் நடிகரின் ரசிகர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வாக்கு கேட்டு வந்தால், அப்போது மட்டும் சும்மா மண்டையை ஆட்டிவிட்டு அதன் பின்னர், வாக்குச் செலுத்தும் போது உச்ச நடிகர் சொல்லும் கட்சிக்கு வாக்குச் செலுத்தி விட்டு போய்விடலாம் என்று ரசிகர்களை தயார்படுத்தி வருகிறாராம். அதுவும் நடிகர் இப்போது உள்ள மன நிலையைப் பார்த்தால் மாஸ் நடிகர் மாநில கட்சி ஒன்றைத்தான் கடுமையாக விமர்சித்து அரசியல் செய்து வருகிறாராம். இதனால் உச்ச நடிகர் தனது ஆதரவை அந்த மாநிலக் கட்சிக்கே கொடுத்து, மாஸ் நடிகரை டரியலாக்க திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X