சீரியல் நடிகையின் சில்மிஷம்.. இயக்குநரால் மேனேஜே செய்ய முடியலயாம்.. ஆசை யாரை விட்டுச்சு!
சென்னை: இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த சீரியலின் பாதியில் அறிமுகப் படுத்தப்பட்ட கதாபாத்திரத்திற்கு தான் இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கேள்வி இந்த ரசிகர்களுக்கு பரவலாகவே இருந்து வந்தது. இப்படி இருக்கையில் அந்த சீரியலில் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணமே, சீரியலின் இயக்குநரை நடிகை தனது கைக்குள் போட்டு வைத்துள்ளதுதானாம்.
அதாவது நடிகை முதலில் வரும்போது, 150 முதல் 170 எபிசோட்களுக்குத்தான் அழக்கப்பட்டாராம். சரி என நடிகையும் வந்துள்ளார். ஆனால் சீரியலில் நடிகையின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சீரியல் சூடு பிடிக்கத் தொடங்கியதால் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில் நடிகை ஒரு கணக்குப் போட்டு காய்களை நகர்த்தியுள்ளார். அதாவது எப்படியும் தன்னை 150 எபிசோட்களுக்குள் வெளியே அனுப்ப மாட்டார்கள், அதே நேரத்தில் எப்போது முடித்தாலும் திடீரென நமது கதாபாத்திரத்தை முடித்துவிடுவார்கள். எனவே இயக்குநரை கைக்குள் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளார்.

வலையில் விழுந்த இயக்குநர்: அதற்கு ஏற்ற வகையில் இயக்குநருடன் அவ்வப்போது வீக் எண்ட் பார்ட்டிகளை அட்டன் செய்து ஒரு வழியாக இயக்குநரை தனது கைக்குள் போட்டுள்ளார். இப்போது இவர்களின் நெருக்கம் சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்திலும் அப்பட்டமாக தெரிகிறதாம். நல்ல இருந்த இயக்குநர் இந்த நடிகை வந்த பின்னர் இப்படி மாறிவிட்டாரே என சீரியலில் உள்ள மற்ற நடிகைகள் நடிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டு உள்ளார்களாம். மேலும் இயக்குநரிடமும் தனியாக இது தொடர்பாக பேசி உள்ளார்கள், இயக்குநரோ என்னால் மேனேஜே செய்ய முடியவில்லை என்று தெரிவித்தது தான் இவர்களுக்கு கூடுதல் ஷாக் கொடுத்துள்ளது.
நடிகையின் பிளான்: மற்ற நடிகைகளும் நடிகர்களும் இவ்வாறு பேசிக் கொண்டு இருப்பதை கேள்விப்பட்ட நடிகை, தனது கதாபாத்திரத்திற்கே அதிக காட்சிகள் வரும்படி இயக்குநரை காட்சிகள் எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறாராம். இதனால் வரும் வருமானம், தன்னை தினமும் டிவியில் பார்ப்பது நடிகைக்கு தனி போதையாக இருக்கிறதாம். அதனால்தான் நடிகை இப்படியான வேலையை பார்க்க மற்றொரு காரணமாகவும் பேசப்படுகிறது. அதே நேரத்தில் இந்த நடிகை நல்லவேளை சினிமாவுக்கு வரவில்லை , சென்றிருந்தால் சில தயாரிப்பாளர்களை வலையில் வீழ்த்தி இருக்கும் என்றும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











