»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

மும்பையில் மாடலிங் செய்துவிட்டு, தெலுங்கில் முயற்சி செய்து தோற்றுவிட்டு, தமிழில் டிவி தொடர்களில் அறிமுகமாகி இப்போதுசினிமாவுக்கு வந்துள்ள தாரிகா சில காலம் கன்னடத்தில் கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்துள்ளார்.


"காதல் சரிகமவில்" தாரிகா, சதீஷ்
கன்னடத்தில் மறைந்த நடிகர் டைகர் பிரபாகருடன் சேர்ந்து இவர் நடித்துள்ள படங்களின் பாடல்கள்இன்னும் தவறாமல் மிட் நைட் மசாலாக்களில் இடம்பெறுகின்றன.

ரஜினி மற்றும் அர்ஜூன் போன்ற கன்னட தேசத்தினரால் கோடம்பாக்கதுக்கு இழுத்து வரப்பட்டபிரபாகரும் சில தமிழ்ப் படங்களில் தலை காட்டியவர் தான் (ரஜினியின்பாண்டியன் படத்தில்வில்லனாக வருவாரே, அவரேதான்!). ஆனால், தமிழில் அவர் தேறவில்லை.

இதையடுத்து கன்னடத்துக்கே திரும்பியவர், அங்கு சூடான சினிமாக்களை அறிமுகம் செய்தார். காமம்,களியாட்டங்களை மையமாக வைத்து பிரபாகர் எடுத்த படங்களில் குண்டக்க மண்டக்க போஸ்கள்,மூவ்மெண்ட்கள் என ஆட்டம் போட்டவர்களில் மிக முக்கியமானவர் தாரிகா.

இப்போது அமீர்ஜானின் காதல் சரிகமவில் நடித்து வருகிறார். பாரதிராஜாவின் ஈர நிலம்படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் ராதிகா தயாரித்த சித்தி டிவி சீரியலில் சோக மயமான ரோலில் நடித்தார். தமிழ் சினிமாவில்ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதற்காக பிரம்ம பிரயத்தனம் செய்ததால் காதல் சரிகம சான்ஸ்கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாரதிராஜாவைப் பார்த்துப் பேசி ஈர நிலத்திலும் வாய்ப்பு பெற்றார்.

தமிழில் கன்னடத்தைவிட அதிகமாகவே கவர்ச்சி காட்டத் தயார் என்று அறிவித்திருக்கிறார் தாரிகா.கன்னடம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளமும் கூட பேசத் தெரியும் என்கிறார் இந்தகட்டு மஸ்தான் அழகி.

காதல் சரிகம படத்தில் இவர் ஆண் வேடத்திலும் சில காட்சிகளில் நடித்து வருகிறார்.

வேட்டியைமடித்துக் கட்டிக் கொண்டு நாற்காலியில் இவர் உட்காரும் இடத்தைச் சுற்றி சூட்டிங் ஸ்பாட்டேசூடாகி விடுகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil