»   »  எகிறும் தல பட பட்ஜெட்… கலக்கத்தில் தயாரிப்பாளர்

எகிறும் தல பட பட்ஜெட்… கலக்கத்தில் தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்டகால தயாரிப்பு பாரம்பர்யம் கொண்ட அந்த நிறுவனம் இடையில் தயாரிப்பையே நிறுத்தி வைத்திருந்தது. ஒல்லி நடிகர் நடித்த ரயில் படம் மூலம் மீண்டும் சினிமா தயாரிக்க வந்தது.

அந்த படத்தில் ரயிலிலேயே நடக்கும் கதை என்பதால் இயக்குனர் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமானது. ஆனால் படம் ரசிகர்களை ஏமாற்றியதால் ஏகப்பட்ட நஷ்டமாம்.

இதே நிறுவனம்தான் அடுத்து தல நடிகர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கும் பட்ஜெட் ரொம்ப்ப்ப்ப பெரிசு. இரண்டு ஹீரோயின்கள், வெளிநாட்டில் படப்பிடிப்பு என்று பட்ஜெட் எகிறுகிறது. போதாக்குறைக்கு ஹிந்தி நடிகரை வில்லனாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இவை எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்தால் நடிகரின் மார்க்கெட் ரேஞ்சையே தாண்டுகிறது. எனவே அகலக்கால் வைத்து விட்டோமோ என்று அச்சப்படுகிறதாம் தயாரிப்பு தரப்பு.

பட்ஜெட்டை குறைத்தால் நடிகர் கோபித்துக்கொள்வார் எனவே அடுத்த கால்ஷீட்டையும் சேர்த்து கேட்கலாம் என்று யோசிக்கிறார்களாம்.

ஆனால் அவர்தான் ரத்ன தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராமே!

English summary
Thala actor's current producer is in fear due to their new movie is become over budgeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil