»   »  அப்போல்லோ போலாமா வேண்டாமா... குழப்பத்தில் தளபதி நடிகர்

அப்போல்லோ போலாமா வேண்டாமா... குழப்பத்தில் தளபதி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில ஆண்டுகளாக தளபதி நடிகருக்கும் மேலிடத்துக்கும் நட்பு சரியில்லை. முக்கியமாக லீடர் படத்தின் கேப்ஷனால் டென்ஷனான தலைமை இதுவரையிலும் நடிகர் மீதான கோபத்தைக் குறைக்கவில்லை.

இடையில் நடிகர் வேறு காவிக் கட்சிப் பக்கம் தூது விட்டது எரிகிற நெருப்பில் எண்ணெயை விட்டது போல் ஆகிவிட்டது. தலைமை உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். திரையுலகின் முக்கிய ஆட்கள் எல்லாம் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். தளபதி நடிகர் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி விசிட் அடிக்கலாமா? அதன் மூலம் நல்ல பெயர் வாங்கலாமா? என்று யோசிக்கிறாராம்.

Thalapathy in big confusion

ஆனால் அப்போல்லோ போனால் அங்கே மதிப்பார்களா? அனுமதி மறுத்தால் அது பெரிய அசிங்கமாகி போய்விடுமே... என்று சில முக்கிய தலைவர்கள் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தளபதி நடிகரை போலவே சில முக்கிய நடிகர்களும் இதே குழப்பத்தில் இருக்கிறார்கள். அதில் உலக நாயகனும் ஒருவர்...!

English summary
Thalapathi actor is in big confusion to visit Appollo hospitals or not.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil