»   »  'புலி'க்கதையா... அய்யய்யோ வேணாங்க...! - பயந்த தளபதி நடிகர்

'புலி'க்கதையா... அய்யய்யோ வேணாங்க...! - பயந்த தளபதி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகரை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் தந்து தளபதிக்கு நல்ல பொசிஷனை சமீபத்தில் அமைத்துக் கொடுத்த இயக்குநர் அவர். முருகக் கடவுளின் பெயரைக் கொண்ட அந்த இயக்குநர் இப்போது அக்கட தேசத்தின் இளவரசனை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்த கதையை முதலில் தளபதியிடம்தான் சொன்னாராம். கதை ஒரு புலி தொடர்பானது. கடத்தல் கும்பல் ஒன்று புலியை கடத்தி ஒரு தியேட்டரில் வைக்கிறது. அந்த தியேட்டரில் பணிபுரியும் ஹீரோவிடம் நெருக்கமாகி விடும் புலியை ஹீரோ எப்படி கடத்தல் கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. புலிக்கும் தமிழருக்கும் வரலாற்றிலேயே தொடர்பு இருக்கு... என்ற ரீதியில் சில அரசியல் வசனங்களும் உண்டு.

Thalapathy says no to Tiger story

இதைக் கேட்டதும் 'இப்ப எனக்கு நிலைமை சரியில்லை. நான் இந்த மாதிரி கதையில நடிச்சா இன்னும் பிரச்னை பண்ணுவாங்க... வேண்டாம்' என்று மறுத்து விட்டாராம் தளபதி.

அவ்வளவு பயம்னா எதுக்கு அரசியல் ஆசை?

English summary
Thalapathi actor has avoided Muruga director’s script due to political fear.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil