Just In
- 10 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 1 hr ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- News
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Finance
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Education
ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் அந்த ஹீரோவால் அதிரடி பஞ்சாயத்து... பிரபல பூ நடிகையிடம் அவகாசம் கேட்டாராமே காமெடி நடிகர்!
சென்னை: பூ நடிகையிடம் அந்த காமெடி நடிகர் மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ள சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது.
வார்த்தைகளை கொஞ்சம் தின்று மென்று பேசுபவர் அந்த காமெடி நடிகர். இன்னா சொல்லுது... என்று கூட ஒரு படத்தில் பேசியிருப்பார்.
இதை வைத்தே அவரது நண்பர்களான வம்பு ஹீரோவும் சாண்டல் காமெடியும் அவரை கிண்டல் அடித்திருப்பார்கள்.

நெருங்கிய தோஸ்த்
அந்த ஹீரோவும் இன்னா சொல்லுதும் நெருங்கிய தோஸ்துகள். வயது வித்தியாசம் பல வருடங்கள் என்றாலும் நட்புக்கு ஏது இதெல்லாம்? கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த காமெடி நடிகரின் மகளுக்கு பிரசவகாலம். அவரை கடவுளின் தேசத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். மகளை கவனிக்க காமெடியின் மனைவி, அங்கு சென்றுவிட்டார்.

சாதகமாக்கினார்
மூன்று மாதமாக அவர் அங்கிருக்க, சும்மா கிடந்த வீட்டை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் ஹீரோ. அதிகாலையில் ஆரம்பித்து இரவு வரை இவர் வீட்டில்தான் தஞ்சமாம். கூடவே ஹீரோவுக்கு வேண்டிய நண்பர்களும் வந்துவிட, தினமும் கச்சேரிதானாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பொறுத்துக்கொள்ளலாம். தினமும் இதே வேலை என்றால்?

பணக்காரர்கள் ஏரியா
காமெடி நடிகர் இருக்கும் வீடு, அபார்ட்மென்ட் டைப். பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா வேறு. அவர் வீட்டை கடந்தால் கப்பென ஒருவித ஸ்மல் வந்திருக்கிறது. இதையடுத்து அபார்ட்மென்ட் அசோசியேஷன் கூடி, இங்க என்னங்க நடக்குது? அக்கம் பக்கத்துல நாங்கள்லாம் குடியிருக்க வேண்டாமா? என்று கேட்க, சமாளித்திருக்கிறார் காமெடி.

பூ நடிகை வீடு
அவர் குடியிருக்கும் வீடு, பூ நடிகைக்குச் சொந்தமானதாம். அசோசியேஷன்காரர்கள் நடிகையிடம் விஷயத்தைச் சொல்லி, இதற்கு மேல் அவர் இங்கு இருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். நடிகையும் அவரது இயக்குனர் கணவரும் காமெடி நடிகரிடம் விசாரித்ததில் வம்பு நடிகரும் அவர் நண்பர்களும் வந்து ஜாலி ஆட்டம் ஆடியிருப்பது தெரிய வந்திருக்கிறது. பின்னர் உடனடியாக வீட்டைக் காலி பண்ணச் சொன்னார்களாம். உடனே கஷ்டம். மூன்று மாசம் டைம் கொடுங்க என்று கேட்டிருக்கிறாராம் காமெடி.