»   »  ஆர்யா-நிலா, அப்படியா?

ஆர்யா-நிலா, அப்படியா?

Subscribe to Oneindia Tamil


ஆர்யாவுக்கும், நிலாவுக்கும் நெருங்கிய காதல் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.


ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த அத்தனை ஹீரோயின்களோடும் அவரை இணைத்து வதந்திகள் வந்து விட்டன. பூஜா, பத்மப்ரியா என இந்த லிஸ்ட் நீண்டது. இந்த நிலையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நிலா.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இதுவரை இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடித்ததில்லை என்பதுதான். ஆனால் இருவருக்கும் இடையே சிங்கப்பூரில் நடந்த நட்சத்திரக் கலைவிழாவின்போது 'கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆகி 'பிசிக்ஸ்' ஆகி விட்டதாம்.

2 மாதங்களுக்கு முன்பு நடந்த சமாச்சாராமாம் இது. அதன் பின்னர் இருவரும் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டும், போனில் குழைந்து கொண்டும் நட்பை தொடருகிறார்களாம்.

சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் ஆர்யா ஒரு ஹோட்டல் திறந்தார். அந்த ஹோட்டலுக்கு நிலா அடிக்கடி வருகிறாராம். ஆர்யாவுடன் அளவளாவி விட்டுச் செல்கிறாராம்.

சமீபத்தில் நான் கடவுள் படத்துக்காக தேனி பக்கம் போய் விட்டார் ஆர்யா. இதனால் செல்போனை ஆப் செய்து வைத்திருந்தார். இதனால் நிலவாவால் பேச முடியாமல் ரொம்பவும் தவித்து விட்டாராம்.

பொறுக்க முடியாமல், சென்னையிலிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டாராம். பின்னர் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இருவரும் சந்தித்து பேசிக் கொண்டார்களாம். ஆர்யாவைப் பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லையாம் நிலாவுக்கு. இதனால் இந்த மதுரை பயணமாம்.

பாலா படத்தை முடித்த பின்னர் நிலாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஆர்யா. இதெல்லாம் உண்மையாய்யா என்று கேட்க ஆர்யாவைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மதுரையில், ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் செல்போனை ஆப் செய்து வைத்திருந்தார் ஆர்யா. ஆனால் நம்மால் நிலா போல பறந்து போக முடியாது என்பதால் விட்டு விட்டோம்.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரித்தான், என்ன நாம சொல்றது!

Read more about: arya, kollywood, nila
Please Wait while comments are loading...