எடுத்ததும் வரலை, என்ன செய்யன்னும் தெரியல... அதிரடியாக அப்படியொரு முடிவை எடுத்த பிரபலம்!

By

சென்னை: எடுத்தப் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாததால், அதிரடியாக அடுத்த முடிவை எடுத்திருக்கிறார், காதல் கொண்ட இயக்குனர்.

அந்த இயக்குனர் ஆரம்பத்தில் எடுத்த லவ் படங்கள் எல்லாம் ஹிட். அட, வித்தியாசமா காதலை சொல்றாரே என்று அவர் மீது அதிக நம்பிக்கை.

அப்படியே தனது பிரதரையும் ஹீரோவாக வளர்த்தார். இருவரும் இணைந்த படங்களுக்கு அத்தனை வரவேற்பு.

டைம் சரியில்லை

டைம் சரியில்லை

அவர் சாண்டல் காமெடியை, ஹீரோவை நடிக்க வைத்து படம் ஒன்றை இயக்கி இருந்தார். இதை சிலருடன் இணைந்து அவரே தயாரித்திருந்தார். படம் முடிந்து இரண்டு வருடமாகியும் ஃபைனான்ஸ் சிக்கலில் இருக்கிறது. அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை என்கிறார்கள்.

இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

அடுத்து அந்த இன்ஷியல் இயக்குனர் நடித்த பேய் படத்தை இயக்கினார். அதில் இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்தப் படம் முடிந்தும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், பல்வேறு சிக்கல்களால் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கிடையே, வம்பு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்து இயக்கப் போவாதாக அறிவித்த படம் தொடங்கப்படவே இல்லை.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த இயக்குனர், அதிரடியாக ஒரு முடிவெடுத்தார். அது, தம்பியுடன் மீண்டும் இணைவது என்பதுதான். ஒரு கதையை ரெடி பண்ணிவிட்டு, மீண்டும் தம்பிக்கே போன் அடிக்க, அண்ணனின் நிலைமை கண்டு உடனே சம்மதம் தெரிவித்து இருக்கிறார், தம்பி.

ஏகப்பட்ட வரவேற்பு

ஏகப்பட்ட வரவேற்பு

இந்த அண்ணன் -தம்பி காம்பினேஷனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்க, இதையடுத்து சமூக வலைத்தளத்தில் தனது அடுத்தப்படம் பற்றி அறிவித்திருக்கிறார் இயக்கம். இது அவர் இயக்கிய முந்தைய படத்தின் அடுத்தப் பாகமாக இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் பேட்டை படத்தின் 2 ஆம் பாகம் என்கிறார்கள். ஆனால், அது காதல் கதை என்கிறது ஒரு தரப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X