»   »  கம்பெனி தீம் மியூசிக்கை மாற்றும் ஒல்லி நடிகர்!

கம்பெனி தீம் மியூசிக்கை மாற்றும் ஒல்லி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒல்லி நடிகரும் ஒல்லி இசையமைப்பாளரும் பிரிந்து விட்டார்கள். அறிமுகப்படுத்திய தன்னை மதிக்காமல், தான் அறிமுகப்படுத்திய ஆனால் இப்போது எதிரி ஆகிவிட்ட டிவி ஹீரோவுக்கு இசை நெருக்கமானதால் ஏற்பட்ட ஈகோ பிரச்னை என்கிறார்கள். ஆனால் இந்த பிரிவுக்கு காரணம் வாரிசு நடிகைதான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

எது எப்படியோ இசையை இனி தன் படங்களில் பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார்.

ஆனால் நடிகரின் கம்பெனி தீம் மியூசிக் அந்த இசையமைப்பாளர் இசையமைத்த வேலையில்லாத படத்தில் இருந்து எடுக்கப்பட்ட தீம் மியூசிக்.

அதைக் கேட்கும் போதெல்லாம் அவரது நினைவு வருமே என்று அதையும் மாற்ற முடிவு எடுத்துவிட்டாராம் நடிகர். சமீபத்தில் வெளியான இரண்டெழுத்து படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளரிடமே புதிய இசையைக் கேட்டிருக்கிறார்.

நடிகருக்கு ஏற்கெனவே இளம் இசை ஹீரோவைப் பிடிக்காது என்பதும் அவருக்கு போட்டியாகவே இந்த இசையை வளர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more about: gossip, hero, கிசுகிசு
English summary
Thin hero has decided to change his company logo’s theme music because of quarrel with his 'Kola veri' musician

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil