படம் ரிலீஸ் ஆகல... 'சிறை' போல் தவிக்கும் இயக்கம்...அவர் உருக்கத்துக்கு பின் இவ்வளவு கதை இருக்காம்

By

சென்னை: படம் ரிலீஸ் ஆகாததால் இயக்குனர் உருக்கமாகப் போட்ட பதிவுக்குப் பின் அவ்வளவு கதை இருக்கிறதாம்.

தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர் அந்த இயக்குனர். அவர் இயக்கிய படங்களில் சில ஹிட்டாகவில்லை என்றாலும் கவனிக்கப்பட்டன.

அடுத்தப் படம் இயக்க, சில ஹீரோக்களை நாடினார். கால்ஷீட் இல்லை, பிசி என்று இழுத்தடித்தனர்.

நம்பிக்கை இருந்தது

நம்பிக்கை இருந்தது

ஒரு கட்டத்தில், தான் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர், இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதால், அவரையே ஹீரோவாக வைத்து படம் இயக்க முடிவெடுத்தார். ஸ்கிரிப்ட் பக்கவாக இருந்ததால், இயக்குனருக்கு நம்பிக்கை இருந்தது. இயக்குனரின் முந்தைய படங்கள் சரியாக ஓடாததால், இந்தப் படத்துக்காக இயக்குனருக்குப் பேசப்பட்ட சம்பளம் மிக மிகக் குறைவு.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

சினிமா அப்படித்தான். எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருந்தால்தான் மதிப்பு. படத்தின் தயாரிப்பாளார் அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு இயக்குனர் மீதும் ஸ்கிரிப்ட் மீதும் அதிக நம்பிக்கை. அவர் படத்துக்கான பணத்தை தனது நம்பிக்கைக்குரிய நபரிடம் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையான நபர், டாப் ஹீரோவின் முன்னாள் மானேஜராம். சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.

கமிஷன் பார்க்க

கமிஷன் பார்க்க

படத்தின் தொடக்கத்தில் இருந்தே அந்த முன்னாள் மானேஜர், எல்லாவற்றிலும் கமிஷன் பார்க்க ஆரம்பித்ததில், செலவை எவ்வளவு சுருக்க வேண்டுமோ, அவ்வளவு சுருக்கி இருக்கிறார்கள். பிறகு, ஸ்பாட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு, சீக்கிரம் முடி, சீக்கிரம் முடி என்ற டார்ச்சர் வேறு. ஹீரோவில் இருந்து இயக்குனர் வரை எல்லோருமே இந்த டார்ச்சரை பொறுத்துக் கொண்டார்களாம். காரணம் இந்த காயத்தை, படத்தின் வெற்றிப் போக்கும் என்ற நம்பிக்கை.

ரிலீஸ் ஆகாததற்கு

ரிலீஸ் ஆகாததற்கு

ஆனால், படத்தை முடித்த பின், ரிலீஸ் பண்ணுவதற்காகத் தனி தொகையை தயாரிப்பாள ரிடம் இருந்து வாங்கி இருக்கிறாராம். அதை, தான் சொத்துவாங்கப் பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார்கள். இங்கு நடந்தது, நடப்பது எதுவும் தெரியாமல், அந்த நல்ல தயாரிப்பாளர், தன் பிசினசை அமெரிக்காவில் உட்கார்ந்தபடி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாததற்கு காரணம் என்று சொல்கிறார்கள் கோலிவுட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X