Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வார்த்தைய பிடுங்கிடுவாங்க.. நமக்கேன் வம்பு.. விழாவுக்கு நடிகர் போகாததுக்கு இதுதான் காரணமாம்!
சென்னை: மூத்த நடிகர் விழாவில் பிரபல நடிகர் வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அமைதியாக இருந்து விட்டு, சத்தமில்லாமல் தனக்குப் பதில் பெரியவரை அனுப்பி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
வர முடியாததற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் பெரிய காமெடி. தலைநகரில் இருப்பதால் வர முடியவில்லை என்றார்கள். வெளிநாட்டில் இருந்தால்கூட பரவாயில்லை. விமானத்தில் பறந்து வந்தால், இரவே கூட திரும்பி விடும் தூரம் தான் அவர் இருந்த இடம். அப்படி இருந்தும் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு காரணமே வேறாம்.

சமீபகாலமாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் எதையாவது எக்குத்தப்பாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறார் நடிகர். தற்போது இந்த விழாவில் கலந்து கொண்டாலும், நிச்சயம் மைக் கிடைக்கும், தானும் ஏதாவது வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொள்வோம் என்று தான் நாசுக்காக மறுத்து விட்டாராம்.
அதோடு தான் பேச நினைத்ததை பெரியவரை பேச வைத்து விட்டார். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலன் கிடைத்து விட்டது. தான் பேச முடியாததைக் கூட அவர் பேச முடியும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.
எப்போதும் தனது நிகழ்ச்சிகளில் ஹைலைட்டே நடிகர் பேச்சாகத்தான் இருக்கும். நேற்று அவர் பேசியிருந்தாலும் அவ்வளவாக எடுபட்டிருக்காது. அதனாலும் தான் நாசுக்காக மறுத்து விட்டார் என்கிறார்கள்.