»   »  விற்பனைக்கு வருகின்றன உச்ச நடிகரின் சகலை நடத்தும் 'பணக்கார பள்ளிகள்'?

விற்பனைக்கு வருகின்றன உச்ச நடிகரின் சகலை நடத்தும் 'பணக்கார பள்ளிகள்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

உச்ச நடிகரின் சகலை சென்னையில் நான்கு பள்ளிகள் நடத்திவருகிறார். எல்லாமே பணக்கார பள்ளிகள். கூடவே முதல்வர் பேரனுக்கே சீட் கொடுக்க மறுத்தது, கட்டணக் கொள்ளை, நீச்சல் குளத்தில் மாணவன் மரணம் என அடிக்கடி சர்ச்சைகள் சுழலும் பள்ளிகள்தான் இந்த நான்கும்.

உச்ச நடிகரின் சகலை நடிகரும் சர்ச்சைகளுக்கு சளைத்தவர் அல்ல... சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே பரபரப்பாக்கின ஒரு இளம்பெண் கொலையில் வாயை விட்டு பரபரப்பை கிளப்பினார். சகலை நடிகரும் அவரது மகளும் இணைந்துதான் பள்ளிகளை நடத்தி வந்தனர். இவர்கள் பண்ணும் அலப்பறைகளுக்காக சம்பந்தமே இல்லாமல் உச்சத்தையும் சீண்டிப் பார்ப்பது வம்பர்கள் வழக்கம்.

இந்நிலையில் நடிகர் தனக்கு சொந்தமான இந்த நான்கு பள்ளிகளையும் மொத்தமாக விற்கப் போகிறாராம் சகலை. லண்டனைச் சேர்ந்த கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று மொத்தமாக விலைபேசி வருகிறது. இது இன்னும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியாது.

அப்படித் தெரிய வரும்போது போராட்டம் வெடிக்கலாம்...!

English summary
Sources say that Top actor's co brother has signed a deal with overseas company to sell all his schools for a whopping price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil