நம்பர் நடிகை நிலைமை இப்படி ஆகிடுச்சே.. யாருமே கண்டுக்கல.. ரொம்பவே ஃபீல் பண்ணி அப்செட் ஆகிட்டாராம்?

By Staff

சென்னை: முன்பெல்லாம் நம்பர் நடிகை ஒரு போட்டோ போட்டால் கூட வேறலெவலில் டிரெண்டாகி விடுவார். அவருடைய ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வைரலாக்கி விடுவார்கள். மேலும், திரையுலகில் இருக்கும் பல பிரபலங்களும் போன் போட்டு வாழ்த்துவார்கள். ஆனால், சமீப காலமாக நம்பர் நடிகை தொடர்ந்து அப்டேட்களாக வெளியிட்டு வந்தாலும், யாரும் அவரை கண்டுக்கொள்ளவே இல்லாமல் விட்டுவிட்ட நிலையில், நடிகை மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகியிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

காதல், திருமணம் என டாப் ஹீரோயின்கள் கமிட் ஆகிவிட்டாலே பல ஹீரோக்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை நடிகையின் கிரேஸ் அவ்வளவுதான் என ஓரங்கட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

Top Actress very upset after her recent movie updates not getting big views

நம்பர் நடிகையின் நிலைமையும் தற்போது அப்படித்தான் ஆகிவிட்டது என்றும் முன்பு இருந்த அளவுக்கு மாஸ் இப்போ அவருக்கு இல்லை என்றும் தொடர் தோல்விகளும் அதற்கு ஒரு காரணம் என்றும் கூறுகின்றனர்.

பயத்தில் தயாரிப்பாளர்: நம்பர் நடிகைக்கு பெரிய மார்க்கெட் இருப்பதாக இயக்குநர் கொடுத்த பில்டப் காரணமாக அதிக பட்ஜெட்டில் படத்தை எடுத்து வரும் தயாரிப்பாளர் சமீபத்தில், பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியான நம்பர் நடிகையின் பட அப்டேட்டுக்கு வரவேற்பே இல்லாமல் இருப்பதை பார்த்து ஆடிப்போய்விட்டாராம். ஆனாலும், அந்த படத்தின் இயக்குநர் டீசர் அல்லது டிரைலர் வெளியானதும் பாருங்க எல்லாருமே நம்ம படத்தை பத்தி தான் பேசுவார்கள் என சமாளித்து இருக்கிறார் எனக் கூறுகின்றனர்.

அடுத்த அப்டேட்டும் கை கொடுக்கல: டாப் நடிகர்களுடன் இணைந்து நம்பர் நடிகை நடித்துள்ள படத்தின் சீன்கள் வெளியான போதும் அதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லையாம். மேலும், சமீபத்தில், ஃபிளாப் படங்களை கொடுத்து வரும் அந்த யங் ஹீரோவுடன் நடிகை நடித்த படத்திற்கு நிச்சயம் ஹைப் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் யாருமே கண்டுக்கலயே என நடிகை ரொம்பவே அப்செட் ஆகி விட்டார் என்கின்றனர்.

ரசிகர்களை கவர: முன்பை போல ரசிகர்களை கவர சில விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தனது படத்தை காப்பாற்ற முடியும் என்கிற தீவிர ஆலோசனையில் நடிகை ஈடுபட்டு வருகிறார் என்கின்றனர். சீக்கிரமே ரசிகர்களுடன் ஒரு மெகா சந்திப்பை நடத்தவும் நடிகை திட்டமிட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X