அந்த பிரபலத்தை திருமணம் செய்ய போகிறாரா புகழ் நடிகை... வேண்டாம் என கெஞ்சும் எக்ஸ்.,கள்
சென்னை : மலையாளத்தில் இருந்து வந்த புகழ் நடிகை, சமீப காலமாக தென்னிந்திய மொழிகளில் டாப் நடிகையாக இருந்து வருகிறார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பிஸியாக நடித்து வந்தவர், நடுவில் சில காலம் காணாமல் போனார்.
திடீரென ஃபீல்ட் அவுட் ஆன நிலைக்கு போய் விட்டீர்களே. என்ன காரணம் என விசாரித்த போது, தான் குண்டாக இருப்பதால் பல டைரக்டர்கள் தன்னை புக் செய்ய தயங்கியதால் ஸ்லிம்மாக கொஞ்சம் பிரேக் எடுத்தேன் என்றார் புகழ் நடிகை. ஆனால் உண்மை அது இல்லையாம். சினிமா வட்டாரத்தில் அவருக்கு அழுகாச்சி நடிகை என ஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டதாம். அது தான் பலரும் இவரை ஓரம் கட்டி வருகிறார்களாம்.

தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறி பல படங்களுக்கு நோ சொன்னதால், டாப் நடிகைகள் லிஸ்டில் இருந்தே புகழ் நடிகையின் பெயரை தூக்கி விட்டார்களாம். இதனால் பதறிப் போன புகழ் நடிகை இப்போதெல்லாம் சினிமா விழாக்கள் கலந்து கொண்டு கவனத்தை ஈர்ப்பது, சோஷியல் மீடியாவில் போட்டோக்கள் போடுவதுமாக இருப்பது, பல வட்டாரங்களில் சான்ஸ் கேட்டு இறங்கி வந்த விபரம் அறிந்து சில டைரக்டர்களும் அவரை புக் செய்து வருகிறார்கள்.
இதனால் மீண்டும் பிஸி நடிகையாகி விட்ட புகழ் நடிகை, சமீப காலமாக ஒல்லிபச்சான் பிரபலத்துடன் நெருக்கமான உறவில் இருந்து வருகிறாராம். அவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்து விட்டாராம். ஆனால் புகழ் நடிகையின் பெற்றோர் இதற்கு நோ சொல்லி, மகளின் திருமணம் பற்றி கேட்பவர்களிடம், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் மகள் சினிமாவில் பிஸியாக இருக்கிறார் என கூறி சமாளித்து வருகிறார்களாம்.
ஆனால் பெற்றோரை எதிர்த்து, ஒல்லிபச்சான் பிரபலத்தை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறாராம் புகழ் நடிகை. புகழ் நடிகை ஸ்லிம் ஆனது கூட ஒல்லிபச்சான் பிரபலத்திற்கு மேட்ச் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக தான் என்றொரு தகவலும் பரவி வருகிறது.
இதை கேள்வி பட்ட ஒல்லிபச்சான் பிரபலத்தால் பாதிக்கப்பட்ட எக்ஸ்.,கள் காலில் விழாத குறையாக புகழ் நடிகையிடம் அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்களாம். நம்பர் நடிகை, பாடகி நடிகை என பலரும் ஒல்லிபச்சான் பிரபலத்தால் பாதிக்கப்பட்டவர்களாம். சமீபத்தில் பிரபலம் ஒருவரின் வீட்டில் நடந்த விவாகரத்திற்கும் ஒல்லிபச்சான் பிரபலம் தான் காரணம் என்று கூட கூறப்பட்டது.
இதனால் ஒல்லிபச்சான் பிரபலத்தால் தாங்கள் பாதிக்கப்பட்ட கதையை கூறி கதறி அழுது வருகிறார்களாம் எக்ஸ்.,கள். ஒல்லிபச்சான் பிரபலம் பற்றி இவ்வளவு சொல்கிறார்களே, ஒருவேளை உண்மையாக இருக்குமோ, நாளைக்கு நமக்கும் இதே கதி தானா என குழப்பமடைந்துள்ளாராம் புகழ் நடிகை.


Click it and Unblock the Notifications











