அவங்களாம் வாழ்த்தாம இருக்க அந்த ஆர்டர் தான் காரணமா.. பூதாகரமாகும் பிசினஸ் பிரச்சனை!

By Staff

சென்னை: பிரம்மாண்ட படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் வேட்டை ஆடி வரும் நிலையில், எந்தவொரு பிரபலங்களும் படத்தை பார்த்தோம், நல்லா இருக்குன்னு வாழ்த்தவே இல்லையே என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நேரம் பிரபலங்கள் வாழ்த்து செய்தி போட்டிருப்பார்களே ஏன் போடவில்லை என்கிற கேள்விக்கு பதிலாக பெரிய இடத்தில் இருந்து வந்த அந்த ஆர்டர் தான் என புதிய பஞ்சாயத்தையே கிளப்புகின்றனர்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கூட இப்போ வாய் திறக்காமல் போக காரணமும் அதுதானாம்.

இயக்குநர் முடிவு

இயக்குநர் முடிவு

அந்த பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை தர வேண்டாம் என இயக்குநர் உறுதியான முடிவு எடுத்தது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர். யார் புதிதாக படம் எடுத்தாலும், எங்களுக்கும் கொஞ்சம் கப்பம் கட்டிட்டு போங்க என ஆரம்பித்ததை ஏற்று பலரும் தங்கள் படங்களை அந்த பேனரிலேயே வெளியிட்டு வந்தனர். ஆனால், அந்த இயக்குநர் அதெல்லாம் வேண்டாம் என்றே சொல்லி விட்டாராம்.

பிசினஸ் போச்சே

பிசினஸ் போச்சே

பெரிய லாபம் வரும் படம் என்பதை அறிந்து மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நிறுவனத்துக்கு இயக்குநரின் இந்த முடிவு காரணமாக பெரிய அளவில் பிசினஸ் போயிடுச்சே என்கிற ஏமாற்றம் எழுந்துள்ளது. இதனால், மறைமுகமாக அந்த நிறுவனம் வெளியிட்ட ஆர்டர் தான் அடுத்த பிரச்சனையை உருவாக்கி உள்ளது என்கின்றனர்.

மெளனம் காக்கும் பிரபலங்கள்

மெளனம் காக்கும் பிரபலங்கள்

உச்ச நட்சத்திரங்கள் பட புரமோஷனுக்கு வந்து ஆஹோ ஓஹோன்னு கற்பனை கதையெல்லாம் கட்டவிழ்த்து விட்ட நிலையில், படம் வெளியான பிறகு ஒருவரும் அது தொடர்பாக வாயே திறக்கவில்லையாம். அதற்கு காரணமே பெரிய இடத்தில் இருந்து வந்த அந்த மறைமுக ஆர்டர் தான் என கோடம்பாக்கம் முழுவதும் தற்போது ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அவரும் பார்க்கவில்லை

அவரும் பார்க்கவில்லை

தமிழர்களின் பெருமைக்குரிய படம் என்றால் இந்நேரம் முதல் ஆளாக படம் பார்த்து ஆதரவு தெரிவிக்கும் அந்த பெரிய ஆளுமையும் படத்தை பார்க்காமல் தவிர்க்க காரணமே இந்த பிசினஸ் தடைப்பட்டதால் தான் என்றும் புகையத் தொடங்கி உள்ளன.

டென்ஷனும் சந்தோஷமும்

டென்ஷனும் சந்தோஷமும்

ஒரு பக்கம் படத்திற்கான வசூல் மொத்தமும் எங்கேயும் மடைமாறி போகாமல் தனக்கே வருவதை நினைத்து சந்தோஷப்பட்ட அந்த தயாரிப்பு நிறுவனம் மறுபக்கம் அடுத்தடுத்த படங்களுக்கு வேறு ஏதாவது சிக்கல் வருமா? என்றும் பெரிய படத்தை வேறு அவர்களுடன் இணைந்து தயாரித்து வருகிறோமே அது முழுமை அடையுமா? என்கிற டென்ஷனும் எழுந்துள்ளது எனக் கூறுகின்றனர்.

மதிக்காத இயக்குநர்

மதிக்காத இயக்குநர்

அதெல்லாம் காரணமில்லை என்றும் பிரபலங்களை அந்த விழாவிலேயே இயக்குநர் சரியாக நடத்தவில்லை என்றும் அவர் மதிக்காமல் விட்டது தான் அந்த படத்தை பற்றி அவர்கள் மெளனம் காத்து வருகின்றனர் என்றும் இன்னொரு பக்கம் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதெல்லாம் அடுத்த படத்திற்கு இடையூறாக அமையும் என்றும் கோடம்பாக்கத்தில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X