»   »  சம்பளத்தை குறைக்கிறதா? சான்ஸே இல்லை திமிறும் ஹீரோக்கள்!

சம்பளத்தை குறைக்கிறதா? சான்ஸே இல்லை திமிறும் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கறுப்பு பண ஒழிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சினிமாதான். அதே நேரத்தில் 'அப்பாடா இனிமே சினிமா உருப்பட்டு விடும். ஹீரோக்கள் கறுப்பு பணமாக சம்பளத்தை வாங்குவது குறைவதால் தானாக சம்பளமும் குறைந்துவிடும்' என்று தயாரிப்பாளர்கள் நம்பினார்கள்.

ஆனால் ஹீரோக்கள் அப்படி ஒரு ஐடியாவிலேயே இல்லை போல...

கறுப்பு பண பிரச்னை காரணமாக சில ஹீரோக்கள் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் பொறுமை காக்கின்றனர். சிலரோ பழைய சம்பளம்தான்... ஆனால் முழுசும் வொய்ட்டா என்று கேட்கிறார்கள்.

"நாங்களாகவா ஏத்தினோம்? எங்க கால்ஷீட் கிடைச்சா போதும்னு நீங்க ஏத்தி விட்டீங்க. இப்ப வாங்குற ரேட்டை விட அதிகமா கொடுத்து கால்ஷீட் வாங்கக் கூட ஒரு கூட்டம் தயாரா இருக்கு. ஒரு ஹீரோவோட கால்ஷீட்தான் இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்குது. அதனால நாங்க சம்பளத்தை குறைக்க முடியாது," என்று திமிறுகிறார்களாம் ஹீரோக்கள்.

சத்திரியனுக்கு சாவே கிடையாது... ரேஞ்சில் சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள் தயாரிப்பாளர்கள்?

English summary
Even after demonitisation, all the top heroes are refusing to reduce their salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil