»   »  இனிமே சாப்பிட மட்டும்தான் வாயைத்திறக்கணும்... தனக்கு தானே புலம்பும் கவி!

இனிமே சாப்பிட மட்டும்தான் வாயைத்திறக்கணும்... தனக்கு தானே புலம்பும் கவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாதாரணமாகவே சினிமா நிகழ்ச்சி என்றால் அங்கே டான் என்று ஆஜராகிவிடும் கவிஞர் அவர். அதிலும் தான் பாட்டெழுதிய படங்களின் நிகழ்ச்சிகள் என்றால் தவிர்க்கவே மாட்டார். கணீர் கணீர் என்று பேசுவதோடு மட்டுமல்லாமல் தான் பேசிய பேச்சு அடுத்த நாள் நாளிதழ்களில் முக்கியத்துவம் பெறும் அளவுக்குப் பார்த்துக் கொள்வார் கவிஞர். பிஆர்ஓ வேலையில் அவரை அடித்துக் கொள்ள முடியாது.

Top lyricist avoids cinema events

ஆனால் இரு நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பெரிய பட பாடல் வெளியீட்டு விழாவிற்கு கவிஞர் ஆப்செண்ட். படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியது கவிஞர்தான். அதோடு அந்த படத்தில் இசை வாரிசுடன்தான் இணைவதையும் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டதும் அவர்தான். அவர் ஏன் விழாவுக்கு ஆப்சென்ட்?

சமீபத்தில் கபாலி படத்தின் ரிசல்ட் பற்றி வாய்விட்டு மாட்டிக்கொண்டார் அல்லவா? அதனால் 'நீங்கள் வந்தால் ஏதாவது சர்ச்சையாக பேசி படத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியாகி விடும்... பிரஸ் ஆட்களும் நோண்டி நோண்டி கேட்பார்கள். எனவே வராமல் இருப்பதே நல்லது...' என்று படக்குழுவினர் நேரடியாகவே சொல்லிவிட்டனராம். சமீபகாலமாக பாடல் எழுதும் வாய்ப்புகளும் குறைந்துவிட்டன.

இப்போது தலைப்பை படித்துக்கொள்ளுங்கள்...!

English summary
That top lyricist is avoiding public functions due to hie recent controversial speech against Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil