»   »  மகன் போடுற ட்யூனை விட, அப்பா போடுற 'ஸீன்' ஓவரா இருக்கே…!

மகன் போடுற ட்யூனை விட, அப்பா போடுற 'ஸீன்' ஓவரா இருக்கே…!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இப்போது உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் அவர். சுமார் 14 ஆண்டுகளாக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகள்தான் அவருடைய கேரியரில் பொற்காலம்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வரை அவர் இசையமைக்கும் படங்களில் எல்லா பாடல்களுமே ஹிட் அடிக்கும்.

டிவி ஹீரோ நடித்த ரஜினி ரசிகர் படத்துக்கு பிறகு அப்படியொரு மேஜிக் நடக்கவே இல்லை.

ஆனால் ட்யூன் கேட்டு வரும் தயாரிப்பாளர், இயக்குநர்களைப் பாடாய் படுத்திவிடுகிறாராம் அதிலும் சமீபகாலமாக அவரது அப்பாவே அவருக்கு மேனேஜராக மாறிவிட்டார். யார் போன் பண்ணினாலும் அவர்தான் எடுக்கிறார். மகன் ஃபாரீனுக்கு கம்போஸிங் போகும்போதும் கூடவே வந்து டார்ச்சர் தருகிறாராம். பில்லும் எகிறுகிறது என புலம்புகின்றனர்.

குத்துப் பாட்டுக்கு ஃபேவரிட்டான இசையமைப்பாளரின் இந்த கும்மாங்குத்துகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா.

விபரம் அறிந்த பெரிய ஹீரோக்கள் இசையை அவாய்ட் பண்ண ஆரம்பித்து விட்டனராம். நிறைய புது இசையமைப்பாளர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சார்!

English summary
Film makers alleged that top music director who scored for TV hero's movie is torturing them.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil