»   »  ஹோட்டல் கட்டும் த்ரிஷா!

ஹோட்டல் கட்டும் த்ரிஷா!

Subscribe to Oneindia Tamil

த்ரிஷா ஹோட்டல் கட்டும் வேலையில் மும்முரமாகியுள்ளாராம்.

ஆரம்பத்தில் சில படங்கள் ஓடாமல், லேட் பிக்கப் ஆக இருந்த த்ரிஷா இப்போது புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார்.அதிலும், சமீபத்தில் வெளியான கில்லிக்குப் பிறகு த்ரிஷாவுக்கு டிமாண்ட் அதிகமாகி விட்டது.

கில்லி படத்தில் த்ரிஷாவின் டான்ஸும், நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. அத்தோடு இல்லாமல் படம் படு ஹிட். இதனால் த்ரிஷாபாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டும் என முடிவு செய்த த்ரிஷா தனது திரையுலகநண்பர்களோடு, தனிப்பட்ட நண்பர்களையும், தோழிகளையும் அழைத்து சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தாராம்.

அத்தனை வகை சோமபானங்களும் பார்ட்டியில் இடம் பெற்றதாம். இந்த உற்சாக பார்ட்டி அதிகாலை வரை நீடித்ததாம்.த்ரிஷாவும் லேசாக ஆடியதாகத் தகவல்.

கில்லிக்குப் பிறகு த்ரிஷாவுக்கு காட்டில் மழை கனத்த மழை பெய்து வருவதால், அம்மணி அதை வீணாக்காமல்புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருகிறார். முதலில் அடையாறு போர்ட் கிளப் பகுதியில் அழகான பங்களா ஒன்றை வாங்கிப்போட்டவர் இப்போது மகாபலிபுரம் சாலையில் அட்டகாசமான ஹோட்டல் ஒன்றைக் கட்டும் பணியில் தீவிரமாகியுள்ளார்த்ரிஷா.

இதற்காக புதிய படங்கள் எது வந்தாலும் உடனடியாக ஒத்துக் கொள்கிறார். அத்தோடு நில்லாமல் காட்டும்கவர்ச்சிக்கேற்ப தனியாக ஒரு ரேட்டையும் கறந்து விடுகிறார். அத்தனை துட்டையும் ஹோட்டல் மேல் போட்டு வருகிறார்.

த்ரிஷா ஹோட்டல் கட்டும் வேலையில் மும்முரமாகியுள்ளாராம்.

இப்போது அஜீத்துடன் ஜி, விஜய்யுடன் திருப்பாச்சி, ரமணா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ஒரு படம் மற்றும் சில தெலுங்குப்படங்களுக்குக் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்காக வாங்கிய பணம் அனைத்தையும் ஹோட்டலில்தான் போட்டுள்ளார்.ஏற்கனவே நடிகர்கள் பலர் கல்யாண மண்டபம், கல்லூரிகள் என ஒரு பக்கம் தூள் கிளப்பி வருகிறார்கள். இந்த வரிசையில்இப்போது த்ரிஷாவும் சேர்ந்துள்ளார்.

த்ரிஷா கட்டி வரும் ஹோட்டல் வேலை தொடர்பான ஆலோசனையில் அவரது அப்பாவை குடும்பத்தினர் புறக்கணிக்கிறார்களாம்.இதனால் கோவித்துக் கொண்டு சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் போய்த் தங்கியுள்ளாராம் த்ரிஷாவின் டாடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil