»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

தெலுங்கு நடிகர் பிரபாஷுடன் இருந்த த்ரிஷாவின் காதல் முறிந்து போய் விட்டதாம்

4 படங்களில் நடிப்பதற்குள்ளேயே கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியவர் த்ரிஷா. சாமி படம் அவருக்கு ஸ்டார் வேல்யூவைக்கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பே அவர் கிசுகிசுக்களில் அடிபடுவதும், பரபரப்பாக பேசப்படுவதுமாக இருந்தார்.

சாமி படத்தில் நடித்தபோது விக்ரமுக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகமாகியதாக பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் த்ரிஷா அதை மறுத்தார்.அதே நேரத்தில் விக்ரமுடன் படத்தில் அவர் படு நெருக்கமாக நடித்து சூட்டைக் கிளப்பியதைப் பார்த்தால் அந்த வதந்தி உண்மையோ என்றுகூடத் தோன்றியது.

பின்னர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்தார். சிம்புவுக்கும் அவருக்கும் காதல் என்றும், கல்யாணத்தில் இது முடியப் போவதாகவும் படு வேகமாகவதந்திகள் பரவின.

இதை இருவரும் மறுக்கவில்லை. சிம்பு எனக்கு நெருங்கிய நண்பர் என்று த்ரிஷா விளக்கமளித்தார்.

இந்த வதந்தியும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஆனால் அதே வேகத்தில் இன்னொரு வதந்தி கிளம்பியது. விஜய்யுடன் இணைத்து த்ரிஷாபேசப்பட்டார்.

விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளதாக முதலில் கிளம்பிய செய்தி பின்னர் காதல் என்று வதந்தியாக மாறியது.

கில்லியில் கிளம்பிய இந்த வதந்தி, திருப்பாச்சியில் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி வந்ததும் படு சூடானது.ஆனால் விஜய், த்ரிஷா இருவரும் இதை மறுத்தனர்.

இந்த நேரத்தில்தான் நிர்வாணக் குளியல் காட்சிகள் குறித்த களேபரம் வந்து த்ரிஷாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்தசமயத்தில் அவர் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இங்கேதான் த்ரிஷாவின் இன்னொரு காதல் குறித்து சொல்ல வேண்டும். தமிழ் ஹீரோக்களுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட த்ரிஷா,தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற நிலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போதுதான் தெலுங்கு இளம் புயல் பிரபாஷுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை இருவரும் மறுக்கவில்லை. எனவே இதுதான்த்ரிஷாவின் உண்மையான காதல் என்று பேசப்பட்டு வந்தது.

த்ரிஷாவும், பிரபாஷும் அடிக்கடி சந்திப்பதும், பேசுவதுமாக இருந்தது தெலுங்கு திரையுலகில் பிரசித்தம். ஆனால் தமிழ்நிாட்டில் தன்னைப்பற்றி வதந்தி பரவி விடக் கூடாது என்பதில் த்ரிஷா கவனமாகவே இருந்து வந்தார்.

இந்த சமயத்தில் இன்டர்நெட்ட்டில் வந்த படங்கள் த்ரிஷாவை ரொம்பவே பாதித்தன. அந்த பாதிப்பிலிருந்து தற்போதுதான் அவர் மீண்டுவந்து கொண்டிருக்கிறார்.

இந் நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி த்ரிஷாவைத் தாக்கியுள்ளது. பிரபாஷ், த்ரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டு விட்டாராம்.இதுதான் த்ரிஷாவைத் தாக்கிய லேட்டஸ்ட் ஷாக்.

இன்டர்நெட்டில் வெளியான படங்களால் பிரபாஷுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது. இதுதான் சரியான சமயம் என்று அவரதுகுடும்பத்தினரும் பிரபாஷை பிரெயன் வாஷ் செய்து விட்டார்களாம். இதனால் த்ரிஷாவிடம், ஸாரி சொல்லி விட்டார் பிரபாஷ்.

வதந்தி மேல் வதந்தியாக வந்து தாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரபாஷ் போட்டுள்ள இடியால் நிலை குலைந்து போயுள்ளாராம்த்ரிஷா.

Read more about: actress, cinema, ramya, trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil