»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

முதலில் விக்ரமோடு கிசுகிசுக்கப்பட்ட திரிஷா பின்னர் சிலம்பரசனோடு இணைத்துப் பேசப்பட்டார்.

சிலம்புவுக்கும் சூப்பர் ஸ்டார் மகளுக்கும் இடையே திரிஷா புகுந்துவிட்டதாக கோடம்பாக்கம் பரபரப்பானநிலையில் அவருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணாவுக்கும் இடையிலான காதல்வெளியே தெரிய வந்தது. இப்போது காதல் தீயாகப் பற்றிக் கொண்டுவிட்டதாம்.

பிரம்மாண்டத் தயாரிப்பாளரான ரத்னம் தனது மகனை டைரக்டராக்குவதற்காக உனக்கு 20.. எனக்கு 18 என்றுஒரு படத்தைத் தொடங்கினார். கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஓடிவிட்டாலும் படம் ரிலீஸ் ஆகவில்லை. காரணம்,பாடல் காட்சிகளை மட்டும் கடந்த 6 மாதமாக எடுத்து வருகிறார் ஜோதி கிருஷ்ணா. இதற்குள் ஷங்கரை வைத்துபாய்ஸ் படத்தையே எடுத்து முடித்துவிட்டார் ரத்னம்.

உனக்கு 20.. எனக்கு 18 படத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஹீரோயினாக புக் செய்யப்பட்டார் திரிஷா. ஹீரோதெலுங்கைச் சேர்ந்த தருண். இன்னொரு ஹீரோயின் அதே ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா.

இந்தப் படம் வளர்கிறதோ இல்லையோ டைரக்டர் ஜோதி கிருஷ்ணா- திரிஷா இடையே லவ் மட்டும் மிகவேகமாக வளர்ந்து கொண்டுள்ளது.

தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் செலவு இப்போதே ரூ. 10 கோடியைத்தாண்டிவிட்டதாம். சுவிட்சர்லாந்தில் சில பாடல்கள் எடுக்கப்பட்டன. இன்னும் 2 பாடல் காட்சிகளை நியூசிலாந்தில்எடுக்கப் போகிறார்களாம். படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.

படம் இப்போதைக்கு முடிகிற மாதிரி தெரியவில்லை. ஆனால், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோஅப்போதெல்லாம் ஜோதி கிருஷ்ணாவின் அலுவலகத்தில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் திரிஷா. இருவருமேவெகு நேரம் கடலை போட்டுவிட்டு கலைகிறார்களாம். ஹைதராபாத்தில் அடிக்கடி சேர்ந்தே சுற்றுகிறார்களாம்.

திரிஷா சூட்டிங்கில் இருந்தால் அங்கேயே தேடிக் கொண்டு வந்துவிடுகிறாராம் ஜோதி கிருஷ்ணா.

இந்தப் படத்தில் ஜோதி கிருஷ்ணாவும் சின்ன ரோவில் எட்டிப் பார்ப்பதாக இருந்தது. ஆனால், அந்த ரோலைபெரிதாக்கி படம் முழுக்க வருவது மாதிரி மாற்றச் சொல்லிவிட்டாராம் திரிஷா. அன்புக் கட்டளையாச்சே,அதையும் நிறைவேற்றிவிட்டாராம் ஜோதி கிருஷ்ணா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil