சீன் காட்டிய சின்னத்திரை நடிகை.. இப்போ சின்ன சின்ன வாய்ப்புக்காக பிட்டு போடுறாராம்?
சென்னை: சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு படிக்கப் போகிறேன் என சீன் காட்டிய ரியாலிட்டி ஷோ நடிகை தற்போது மீண்டும் சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்துக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இன்ஸ்டாகிராம் பிரபலமான அந்த சின்னத்திரை நடிகை ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார்.
அழகை பயன்படுத்தி சினிமா வாய்ப்புகளை பெற்ற நிலையிலும், நடிப்புத் திறமை பெரிதாக இல்லாத நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் நடிகையை அப்படியே ஓரங்கட்டி விட்டார்கள்.

பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கதவை தட்டியதாகவும் தான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று பலே கதை ஒன்றை சொல்லியிருந்தார்.
சீன் காட்டிய சீரியல் நடிகை: சின்னத்திரையில் இருந்து பாஸ் நடிகர் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த நடிகை அடுத்த லேடி சூப்பர் ஸ்டாரே தான் தான் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து அவருக்கு வந்த உப்புமா வாய்ப்புகளால் ஊறுகாய் போல மட்டுமே திரையில் பயன்படுத்தப்பட்டார். இவர் எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் துரத்தி அடிக்க சினிமா வாய்ப்புகள் எல்லாம் அபப்டியே காணாமல் போய்விட்டது என்கின்றனர்.
சான்ஸ் தேடி அலையும் நிலை: சினிமா எல்லாம் தனக்கு செட்டாகாது என்று பலரும் தன்னை ஏமாற்றி வருகின்றனர் என்றெல்லாம் பில்டப் பண்ண அந்த நடிகை ஃபாரீன் போய் படிக்கப் போவதாக பந்தா காட்டினார். ஆனால், தற்போது பிழைப்புக்காக வேறு வழி இல்லாமல் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளை பிடிக்க ரொம்பவே போராடி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சப்ஸ்கிரைபர் சைடு பிசினஸ்: ஏற்கனவே பல ரியாலிட்டி ஷோ சின்னத்திரை பிரபலங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைபர்களை உருவாக்கி பலான வீடியோக்களையும் புகைப்படங்களையும் காட்டி சம்பாதித்து வரும் நிலையில்,பல மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள இவரையும் சப்ஸ்கிரிப்ஷன் வேலையை பார்க்க உடன் இருப்பவர்கள் வற்புறுத்தி வருவதாகவும் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாமல் போனால் இவரும் அந்த வேலையை ஆரம்பித்து விடுவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











